• விபத்தில் மூளை சாவடைந்த ஆந்திர இளைஞர் உடல் உறுப்புகள் தானம்.
· விபத்தில் மூளை சாவடைந்த ஆந்திர இளைஞ ர் உடல் உறுப்புகள் தானம் . ராணிப்பேட்டை, சி . எம் . சி . மருத்துவமனையில் கடந்த 26- ம் தேதி ஆந்திர மாநிலம், சித்தூர் பொம்மசமுத்திரம் அருகே இரு சக்கர வாகனத்தை ஓட்டி சென்ற லிக்கிபிரபாஸ் என்ற 22 வயது இளைஞர் சாலையின் தடுப்புகளில் இரு சக்கர வாகனம் மோதி படுகாயமடைந்தார். அவரை உறவினர்கள் ராணிப்பேட்டை சி . எம் . சி மருத்துவமனையில் சேர்த்தனர். இந்நிலையில் லிக்கிபிரபாஸுக்கு மூளை சாவு ஏற்பட்டதையடுத்து அவரின் உறவினர் உடல் உறுப்புகளை தானம் செய்ய முன் வந்தனர். இதையடுத்து சிறுநீரகம் ராணிப்பேட்டை சி . எம் . சி மருத்துவமனைக்கும் , ஒரு சிறுநீரகம் சென்னை காவேரி மருத்துவமனைக்கும் , கல்லீரல் ராணிப்பேட்டை சி . எம் . சி மருத்துவமனைக்கும் , கண்கள் வேலூர் சி . எம் . சி மருத்துவமனைக்கும் தானமாக வழங்கப்பட்டது.