• வேலூர் தென்மேற்கு பருவமழை முன்னேற்பாடு பணிகள்.

 ·        வேலூர் தென்மேற்கு பருவமழை முன்னிட்டு மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடு பணிகள் - அனைத்து துறை அலுவலர்களுடனான ஆலோசனை கூட்டம் - மாவட்ட ஆட்சி தலைவர் தலைமையில் நடைபெற்றது.

வேலூர் மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை முன்னிட்டு மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்து அனைத்து துறை அலுவலர்களுடனான ஆலோசனை கூட்டம் மாவட்ட ஆட்சி தலைவர் வே.இரா.சுப்புலெட்சுமி தலைமையில் ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது. 

இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சி தலைவர் தெரிவித்ததாவது.

தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை – 2026 பருவகாலமானது எதிர்வரும் 26.05.2026 அன்று தொடங்கப்பட உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது. சென்ற 2025-ம் ஆண்டு தென்மேற்கு பருவமழை காலத்தில் வேலூர் மாவட்டத்தில் 579.8 மி.மீ மழை பெய்துள்ளது. இது இயல்பைவிட 34% கூடுதலாக மழை பொழிந்துள்ளது.

கடந்த 2025-ம் ஆண்டில் பெய்த மழையினை கணக்கில் கொண்டு வேலூர் மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்படக்கூடிய பகுதிகளை கண்டறியப்பட வேண்டும். (Vulnerable Areas) .

கடந்த ஆண்டு கண்டறியப்பட்ட 23 வெள்ளத்தால் பாதிக்கப்பட கூடிய பகுதிகளில் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு, தற்போது அந்த இடங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்படாதவாறு உள்ளதா? என்பதை சம்மந்தப்பட்ட வட்டாட்சியர்கள் தணிக்கை செய்து, அப்பகுதிகளை வெள்ளத்தால் பாதிக்கப்படக் கூடிய பகுதிகளின் பட்டியலிலிருந்து நீக்கம் செய்ய பிரேரணைகளை உடனடியாக அனுப்பி வைக்குமாறு அனைத்து வட்டாட்சியர்களுக்கும் அறிவுறுத்தப்படுகின்றது.

வேலூர் மாவட்டத்தில் கடந்த ஆண்டு மொத்தம் 1,230 முதல்நிலை பொறுப்பாளர்கள் கண்டறியப்பட்டுள்ளனர். (ஆண்கள் -1085, பெண்கள்-145) மேற்படி பட்டியலினை கொண்டு தற்போதும் அந்த நபர்கள் முதல்நிலை பொறுப்பாளர்களாக பணியாற்ற இசைவு தெரிவிக்கின்றனரா என்றும், அவர்கள் தற்போது அந்த இடத்தில் வசிக்காமல் வெளியூர் சென்றுவிட்டாலோ, அல்லது அவர் முதல்நிலை பொறுப்பாளராக பணியாற்ற விருப்பமில்லை என தெரிவித்தாலோ அவரது பெயரினை முதல்நிலை பொறுப்பாளர்கள் பட்டியலிலிருந்து நீக்கம் செய்து, பட்டியலினை மேம்படுத்தி புதியதாக பட்டியல் தயார் செய்யப்பட வேண்டும்.

வெள்ளத்தால் பாதிக்கப்பட கூடிய பகுதிகளில் உள்ள பொதுமக்களை பேரிடர்களின்போது தங்க வைக்க தேவையான அனைத்து அடிப்படை வசதிகளுடன் கூடிய 26 நிவாரண மையங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

வேலூர் மாவட்டத்தில் கண்டறியப்பட்டுள்ள 26 நிவாரண முகாம்களை சம்மந்தப்பட்ட வட்டாட்சியர் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் ஆகியோர் கூட்டாக தணிக்கை செய்து அறிக்கை ஒரு வார காலத்திற்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

வேலூர் மாவட்டத்தில் உள்ள பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் சார்பு துறைகளுக்கான அலுவலர்களின் விவரம் மற்றும் அவர்களது கைபேசி எண்களுடன் புதியதாக தொலைபேசி எண்கள் விவரப் புத்தகம் தயார் செய்யப்பட்டு வருகிறது.

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கி வரும் கட்டுப்பாட்டு அறையின் கட்டணமில்லா தொலைபேசி எண். 1077 குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

வேலூர் மாவட்டத்தில் பருவமழை காலத்தினை முன்னிட்டு பலதுறை அலுவலர்கள் அடங்கிய வட்டம் அளவிலான மண்டல குழுக்கள் (Taluk Level Inter Departmental Zonal Teams) 6 குழுக்கள் அமைக்கப்படும். இந்த குழுக்கள் வருவாய்த் துறையில் உள்ள ஒரு துணை ஆட்சியர் தலைமையில், வருவாய் துறை, ஊரகவளர்ச்சி துறை, வேளாண்மை துறை, தோட்டக்கலை துறை, மின்சார துறை, பொதுசுகாதார துறை உள்ளிட்ட 11 துறைகளைச் சார்ந்த அலுவலர்கள் இடம் பெறுவர். இந்த குழுவினர் பருவமழை காலங்களின் போது ஏற்படும் இயற்கை இடர்பாடுகளிலிருந்து மீட்பு மற்றும் சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

வட்ட அளவிலான குழுக்களை போன்றே 20 உள்வட்ட அளவிலான மண்டல குழுக்கள் அமைக்க வேண்டும். மேற்படி பலதுறை அலுவலர்கள் அடங்கிய மண்டல குழுவினருடன் இணைத்து மீட்பு மற்றும் சீரமைப்பு பணிகளை மேற்கொள்வதற்காக இந்திய செஞ்சிலுவை சங்கம், N.C.C, N.S.S, தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் ஆகியவற்றில் உள்ள தன்னார்வலர்கள் கொண்டு Disaster Response Guards–களை அமைக்க வேண்டும். இது குறித்து தங்கள் பகுதியில் உள்ள மேற்கண்ட தொண்டு நிறுவனங்களுடன் தொடர்பு கொண்டு Disaster Response Guard-ல் இணைய விருப்பமுள்ள தன்னார்வலர்களின் பட்டியலை உடனடியாக சமர்ப்பிக்குமாறு அனைத்து வட்டாட்சியர்களும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

பருவமழை காலங்களில் காற்று மற்றும் மழையினால் மரங்கள் விழும்போது அவற்றை வெட்டி அப்புறப்படுத்த கண்டறியப்பட்டுள்ள முதல் நிலை பொறுப்பாளர்கள் தயார் நிலையில் இருக்க அறிவுறுத்த வேண்டும்.

இணைப்பதிவாளர் (கூட்டுறவு) அவர்களை நிவாரண மையங்களுக்கான நியமன அலுவலராக (Nodal Officer) நியமனம் செய்யப்பட்டு, அவர் தலைமையின்கீழ் நிவாரண மையங்களை தணிக்கை செய்து, பொதுமக்களை தங்க வைப்பதற்கான அனைத்து அடிப்படை வசதிகளும் உள்ளனவா என்பதை ஆய்வு செய்து கொள்ள வேண்டும்.

மேற்படி நிவாரண முகாம்களை தங்க வைக்கப்படும் பொதுமக்களுக்கு தேவையான குடிநீர், உணவு, பால் மற்றும் மளிகை பொருட்கள்,  துணிகள் ஆகியவை முறையாக வழங்கப்பட வேண்டும். இவைகளில் உணவிற்கு தேவையான அனைத்து பொருட்களும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்திலிருந்து கொள்முதல் செய்து கொள்ள வேண்டும். பால் பொருட்களை ஆவின் நிறுவினத்திலிருந்து கொள்முதல் செய்து கொள்ள வேண்டும்.

நிவாரண முகாம்களில் தேவையான அனைத்து அடிப்படை வசதிகள், தேவையான மருந்து வசதிகள் ஆகியவை வழங்க வேண்டும். வேலூர் மாவட்டத்தில் உள்ள ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்பினர் தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள மழைநீர் செல்லும் கால்வாய்களை நல்ல முறையில் தூர்வாரி, மழைநீர் தங்குதடையின்றி செல்ல  நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.

ஊரக மற்றும் உள்ளாட்சி அமைப்பினர் தங்களது கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து ஏரி, குளங்கள் மற்றும் நீர்வரத்து கால்வாய்களை மழைநீர் முறையாக தேக்கும் வண்ணம் தூர்வாரி, ஆக்ரமணங்களை அகற்றி சீரமைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்பினர் புயல் மற்றும் அதிகமழை பொழிவு காலங்களில் தங்களது கடடுப்பாட்டில் உள்ள மேநீர் தேக்கத் தொட்டிகளில் முன்னெச்சரிக்கையாக தொட்டியில் குடிநீர் நிரப்பி தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.

மேல்நிலை நீர் தேக்க தொட்டிகளில் உள்ள நீர் முறையாக குளோரினேஷன் செய்யப்பட வேண்டும். இதனை சம்மந்தப்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்பினரும் தணிக்கை மேற்கொள்ள வேண்டும்.

பொது சுகாதாரத் துறையினர் பருவ மழை காலங்களுக்கு மருந்துகள் மற்றும் உயிர் காக்கும் மருந்துகள் ஆகியவற்றை தேவையான அளவு இருப்பில் வைத்துகொள்ள வேண்டும்.

பருவமழை காலங்களில் நோய் தொற்று ஏற்படா வண்ணம் அனைத்து பகுதிகளுக்கும் மருத்துவர்கள் குழு அவ்வப்போது ஆய்வு செய்ய வேண்டும். மேற்படி ஆய்விற்கு தேவையான மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.

வேலூர் மாவட்டத்தில் உள்ள மருத்துவமனைகளில் அவசர சிகிச்சை பிரிவு மற்றும் மிக அவசர பிரிவு ஆகியவற்றில் போதிய அளவு மின்சார வசதி இருப்பில் உள்ளதையும் (Power Backup),  போதிய அளவு ஆக்சிஜன் சிலிண்டர்கள் இருப்பில் உள்ளதையும், போதிய அளவு ஜெனரேட்டர்களை இயக்குவதற்கு தேவையான டீசல்கள் கையிருப்பில் உள்ளதையும், தீயணைப்பு கருவிகள் உள்ளதையும் உறுதி செய்து கொள்ள வேண்டும். மேலும் வெள்ள பாதிப்பினால் தரைதளம் பாதிக்கப்படும் போது, அங்குள்ள நோயாளிகளை முதல் தளத்திற்கு மாற்றுவதற்கு போதிய அளவு முதல் தளத்தில் இடவசதி உள்ளதா என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்

மழை காலங்களில் தொற்று நோய் ஏற்படாத வண்ணம் மேநீர் தேக்கத் தொட்டிகளில் குளோரினேஷன் செய்தல் மற்றும் கொசு மருந்துகள் அடித்தல் போன்ற பணிகளை அவ்வப்போது மேற்கொள்ளப்பட வேண்டும்.

வட்ட அளவிலான மண்டல குழுக்கள் (IDZT) பொது சுகாதாரத் துறை ஒருங்கிணைப்பாளருடன் நகர் பகுதிகளில் வார்டு வாரியாகவும்,  கிராமப் பகுதிகளிலும் பொதுமக்களிடம் சுற்றுப்புறத்தை சுகாதாரமாக வைத்திருக்க விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். (டெங்கு நோய் தாக்கம் குறைப்பதற்காக).

பொதுப்பணித் துறையினர் தங்களது கட்டுப்பாட்டில் உள்ள நீர்வழி தடங்களில் உள்ள ஆக்ரமிப்புகள் மற்றும் அடைப்புகளை சீரமைத்து, மழைநீர் தடையின்றி செல்வதற்கு ஏதுவாக பராமரிக்க வேண்டும்.

பருவமழை காலங்களில் மழை வெள்ளத்தால் கால்நடைகள் பாதிக்கப்படாத வண்ணம் பாதுகாக்கப்பட வேண்டும். அதற்காக வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள கால்நடைகளை, மேடான பகுதிகளுக்கு கொண்டு செல்லும் வகையில் தங்க வைப்பதற்கு ஏதுவான இடங்களை கண்டறிந்து கால்நடை பராமரிப்பு துறை இணை இயக்குநர் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்.  

கால்நடைகளுக்கு தேவையான உணவு மற்றும் மருந்துகள் ஆகியவை போதிய அளவில் இருப்பில் உள்ளதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.

போக்குவரத்து துறை அலுவலர்கள் தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்களை பேரிடர் காலங்களில் மக்களை வெளியேற்றும் பணிக்கு தயார் நிலையில் இருக்குமாறு அறிவுறுத்த வேண்டும்.

புயல் காலங்களில், புயல் கரையை கடக்கும் 6-மணி நேரத்திற்கு முன்பு பேருந்துகள் இயக்கம் செய்வதை நிறுத்தவேண்டும்

நெடுஞ்சாலை துறையை சார்ந்த அலுவலர்கள் புயல் / மழை / வெள்ளக் காலங்களில் மரங்கள் மற்றும் மின்கம்பங்கள் பெயர்ந்து விழுவதால் உடனடியாக அகற்றும் வண்ணம் மின் அறுவை இயந்திரங்கள் புல்டோசர் மற்றும் போன்ற அனைத்து வகையான கனரக இயந்திரங்களையும் வைத்துள்ள பதிவு பெற்ற ஒப்பந்ததாரர்களின் விவரங்களை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். மேலும் தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள பாலங்கள் மற்றும் சிறுபாலங்களில் 1000மீ அளவிற்கு மேல் மற்றும் கீழ் புறங்களில் உள்ள அடைப்புகளை அகற்றி சீரமைக்கப்பட வேண்டும்.

தேசிய நெடுஞ்சாலை, மாநில நெடுஞ்சாலை மற்றும் ஊரக சாலைகளின் ஓரத்தில் உள்ள மரங்களை தணிக்கை செய்து அவற்றில் விழுந்துவிடும் நிலையில் உள்ளவை மற்றும் அபாயகரமான நிலையில் உள்ளவற்றை அகற்ற அறிக்கை தயார் செய்து சம்மந்தப்பட்ட வருவாய் கோட்ட அலுவலர்களுக்கு அனுப்பி ஆணை பெற்று அகற்றப்பட வேண்டும்.

தமிழ்நாடு மின்சார வாரியத்தினர் மழை காலங்களில் ஏற்படும் பாதிப்புகளை சரிசெய்ய தேவையான உபகரணங்களை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.  

தீயணைப்பு துறையினர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளிலிருந்து பொதுமக்களை மீட்பதற்கான அவர்களது துறையின் மூலம் உள்ள அனைத்து உபகரணங்களையும் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.

தீயணைப்பு மற்றும் மீட்பு பணித்துறையினர் பேரிடர்கள் மற்றும் மீட்பு பணிகள் குறித்து விழிப்புணர்வை பொதுமக்களிடையே ஏற்படுத்த வகையில் போலி ஒத்திகை பயிற்சியினை (Mock Drills) மேற்கொள்ள வேண்டும்.

ஏற்கனவே தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் மூலம் வழங்கப்பட்டுள்ள பேரிடர் காலங்களின் போது பள்ளிகளின்பாதுகாப்பு குறித்த வழிகாட்டுதல்களை தவறாமல் கடைபிடிக்குமாறு பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களிடம் அறிவுறுத்த வேண்டும். அனைத்து பள்ளகளிலும் சுற்றுச்சுவர் மற்றும் கட்டிடங்களின் உறுதித்தன்மையினை சரிபார்க்கப்பட வேண்டும்.

மழை காலங்களில் மாணவ / மாணவிகளை வகுப்பறைகளில் உள்ள சுவிட்ச் போர்டுகள் மற்றும் மின்சாதனங்களை தேவையின்றி தொடுவதையும் இயக்குவதையும் தவிர்க்க வேண்டும்.  மாணவ / மாணவிகள் பள்ளி வளாகத்தில் மழை நேரங்களில் வெளியே வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

ஏற்கனவே தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் மூலம் வழங்கப்பட்டுள்ள பேரிடர் காலங்களின் போது பள்ளிகளின் பாதுகாப்பு குறித்த வழிகாட்டுதல்களை தவறாமல் கடைபிடிக்குமாறு அனைத்து பள்ளி தாளாளர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டது.

பள்ளிகளில் உள்ள அனைத்து மின்சாதனங்களும் நல்ல முறையில் இயங்குவதை உறுதி செய்து கொள்ள வேண்டும். பள்ளியில் உள்ள அனைத்து வகுப்பறைகளிலும் உள்ள மின்சாதன பொருட்களை நல்ல முறையில் பராமரிக்கப் வேண்டும்.

மழை காலங்களில் மின்சாதன பொருட்களை மின்சாரம் துண்டிக்கப்பட்ட நிலையில் உபயோகப்படுத்த தேவையான அளவிற்கு ஜெனரேட்டர்கள் மற்றும் டீசல்கள் கையிருப்பில் வைத்திருக்க வேண்டும். மழை காலங்களில் மாணவ  /  மாணவியர்களை அவசியமின்றி மைதானத்தில் விளையாட அனுமதிக்கக்கூடாது.

நீர்நிலைகளில் உள்ள ஆக்ரமணங்களை உடனடியாக அகற்றப்பட வேண்டும். வேலூர் மாவட்டத்தில் உள்ள மழை மானிகளின் தற்போதைய நிலை குறித்து சம்மந்தப்பட்ட வட்டாட்சியர்கள் தணிக்கை செய்து அறிக்கை அனுப்ப வேண்டும்.

வட்டாட்சியர்கள் தங்கள் வட்டத்திற்குட்பட்ட பலதுறை அலுவலர்கள் அடங்கிய வட்ட அளவிலான மண்டல குழுவில் இடம்பெற்றுள்ள அதிகாரிகள் மற்றும் முதல் நிலை பொறுப்பாளர்களை கொண்டு ஒரு வாட்ஸ் அப் குருப் ஆரம்பித்த தினசரி நிலையினை கண்காணிக்க வேண்டும்.

வட்டாட்சியர்கள் தங்கள் பகுதிகளில் உள்ள ஜே.சி.பி, டிராக்டர் மற்றும் பொக்லைன் ஆகியவற்றின் உரிமையாளர்கள் விவரம் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். வருவாய் கோட்டாட்சியர் மற்றும் வட்டாட்சியர்கள் மீட்பு மையங்களை தற்போதைய நிலை குறித்து தணிக்கை செய்யப்பட வேண்டும்.

பருவமழை காலங்களில் வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் இரண்டு மாதங்களுக்கான அத்தியாவசியப் பொருட்களை இருப்பில் வைத்திருப்பதை கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளர் உறுதி செய்ய வேண்டும்.

 உதவி இயக்குநர் (ஊராட்சி),  உதவி இயக்குநர் (பேருராட்சி), நகராட்சிகளின் மண்டல இணை இயக்குநர் மற்றும் மாநகராட்சி ஆணையாளர் ஆகியோர் தங்கள் துறை மூலம் உள்ள ஜே.சி.பி இயந்திரம், மரம் வெட்டும் கருவிகள்,  கழிவுகளை வெளியேற்ற தேவையான லாரிகள், வெள்ளப் பகுதிகளில் மீட்பதற்கான படகுகள், நீர் நிலைகளில் ஏற்படும் உடைப்புகளை சரிசெய்ய தேவையான மணல் மூட்டைகள், தேங்கும் நீலை வெளியேற்ற தேவையான மோட்டார் பம்புகள் ஆகியவற்றை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.

மாவட்ட விநியோக அலுவலர் மற்றும் இணை பதிவாளர் (கூட்டுறவுத்துறை) தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக அலுவலர்கள் ஆகியோர் உணவு தாணியங்கள்,  மண்ணெண்ணெய் மற்றும் கோணிப்பைகளையும், எல்.பி.ஜி, டீசல் போன்றவற்றையும் போதிய அளவில் இருப்பு வைத்திருப்பதை கண்காணிக்கவும்,  உறுதி செய்ய வேண்டும்.

பொதுப்பணித்துறை, உள்ளாட்சித்துறை அலுவலர்கள் தங்கள் கட்டுப்பாட்டிலுள்ள ஏரி, குளம், குட்டை மற்றும் கால்வாய் ஆகியவற்றை தூர்வாரி, மழை வெள்ளங்கள் குடியிருப்பு பகுதிகளுக்குள் செல்லாவண்ணம் தடுப்பு பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்

பொதுப்பணித்துறையை சார்ந்த அலுவலர்களை புயல்/சூறாவளி சமயங்களில் மக்கள் தங்குமிடங்களிலும், பள்ளிக்கட்டடங்களிலும், சமுதாய அரங்குகளிலும் மற்றும் தனியார் திருமண மண்டபங்களிலும் ஆய்வு மேற்கொண்டு அவை நல்ல முறையில் புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் தங்கும் வகையில் உள்ளனவா என உறுதி செய்ய வேண்டும்.

அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்கள், வட்டார வளர்ச்சி அலுவலகங்கள், மாநகராட்சி மண்டல அலுவலகங்கள், நகராட்சி அலுவலகங்கள், பேரூராட்சி அலுவலகங்கள், நெடுஞ்சாலை துறை, பொதுப்பணி துறை, மின்சார துறை, காவல் துறை, கால்நடை பராமரிப்பு துறை, தீயணைப்பு துறை, பள்ளி கல்வி துறை சார்ந்த அலுவலகங்களில் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட வேண்டும். இந்த கட்டுப்பாட்டு அறைக்கு தனியாக ஒரு அலைபேசி இருக்க வேண்டும். மேற்படி கட்டுப்பாட்டு அறையில் 24-மணி நேரமும் அலுவலர்கள் பணியில் இருக்குமாறு உத்திரவு பிறப்பிக்க வேண்டும். மேற்படி உத்திரவு நகலினை மாவட்ட பேரிடர் மேலாண்மை ஆணையத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும்.

மழையினால் ஏற்படும் சேத விவரங்கள் குறித்து தகவல்களை உடனுக்குடன் மாவட்ட பேரிடர் மேலாண்மை ஆணையத்திற்கு தெரிவிக்கும் வகையிலும், பொதுமக்களிடமிருந்து வரப்பெறும் புகார்களை தீர்க்கும் பணியினையும் கட்டுப்பாட்டு அறையில் நியமனம் செய்யப்பட உள்ள அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டும் என  மாவட்ட ஆட்சி தலைவர் வே.இரா.சுப்புலெட்சுமி தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ந.உ.சிவராமன், மாவட்ட வன அலுவலர் டி.அசோக்குமார், மாவட்ட வருவாய் அலுவலர் மா.சிவசுப்பிரமணியன், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பழனி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) பொ.குணசேகரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

 

 

Comments

Popular posts from this blog

• கீரை திருவிழா - மக்கள் நல சந்தை.

• ஆக்சிலியம் கல்லூரி போருக்கு எதிரான அமைதி பேரணி.

• PT LEE Employment Opportunities & Career Guidance Program.