Posts

• தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டு கழகம் கடனுதவி.

·         தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலம் வழங்கப்படும் கடன் திட்டங்களின்கீழ் கடனுதவிகளை பெற்று பயனடைய வேலூர் மாவட்ட ஆட்சி தலைவர் தெரிவித்துள்ளார்.             பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் வகுப்பினை சார்ந்த தனிநபர்கள் மற்றும் குழுக்கள் தங்களது பொருளாதார முன்னேற்றத்திற்காக சாத்தியக் கூறுள்ள சிறு தொழில்கள் மற்றும் வியாபாரம் செய்ய தனிநபர் கடன் மற்றும் குழுக் கடன் திட்டங்களுக்கு தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலம் கடன் உதவி வழங்கி வருகிறது.   மேலும் இக்கழகம் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் மாணவ, மாணவியர்களுக்கு வெளிநாட்டு பல்கலை கழகங்களில் உயர்கல்வியை மேற்கொள்வதற்காக கடன் வழங்கப்படுகிறது. தனிநபர் கடன் மற்றும் குழு கடனுக்கான தகுதி மற்றும் சமர்ப்பிக்கப்பட வேண்டிய சான்றுகள் 1.                ...

• கிருஷ்ணசாமி பள்ளி நிறுவனர் விழா.

Image
·          கிருஷ்ணசாமி பள்ளி நிறுவனரின் 115- வது பிறந்த நாள் விழா- மாணவர்களுக்கு பரிசு வழங்கல் .       வேலூர் கிருஷ்ணசாமி முதலியார் சீனியர் செகண்டரி பள்ளி நிறுவனர் கிருஷ்ணசாமி முதலியாரின் 115- வது பிறந்த நாள் விழா மற்றும் எஸ் . எஸ் . எல் . சி ., பிளஸ் - 2 பொது தேர்வில் வெற்றி பெற்ற மாணவ , மாணவிகளுக்கு பரிசு வழங்கும் விழா நடைபெற்றது . விழாவிற்கு பள்ளி தாளாளர் த . சிவக்குமார் தலைமை தாங்கினார் . முதல்வர் ஆர் . ஜி . சுஜாதா முன்னிலை வகித்தார் .       சிறப்பு விருந்தினராக வேலூர் சிவில் என்ஜினியர்கள் சங்க தலைவர் வி . எஸ் . அர்ஜுனன் கலந்து கண்டு பொது தேர்வுகளில் பள்ளி அளவில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ , மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டி பேசினார் . விழாவில் டாக்டர் கார்த்திகேயன் கலந்து கொண்டு பேசினார் .     விழாவில் பள்ளி மேலாளர் துர்காதேவி , ஆசிரியர்கள் , மாணவ , மாணவிகள் , பெற்றோர்கள் கலந்து கொண்டனர் .

• விஐடியில் 28-ந் தேதி பாரம்பரிய காய்கறி, விதை திருவிழா.

Image
 ·          விஐடியில் 28- ந் தேதி மண் காப்போம் இயக்கம் சார்பில் பாரத பாரம்பரிய காய்கறி மற்றும் விதை திருவிழா.       வேலூர் ஈஷா யோகா மையத்தில் சத்குருவின் மண் காப்போம் இயக்க ஒருங்கிணைப்பாளர்   ஸ்ரீமுகா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார் .       அப்போது அவர் கூறியதாவது ;       காட்பாடியில் உள்ள வி . ஐ . டி பல்கலைகழகத்தில் 28 - ந் தேதி பாரத பாரம்பரிய காய்கறி மற்றும் விதை திருவிழா நடக்கிறது . பாரம்பரிய காய்கறி மற்றும் விதை உற்பத்தியில் முன்னோடியாக விளங்கும் விவசாயிகள் மற்றும் நாட்டின் முன்னணி வேளாண் ஆராய்ச்சி நிறுவனங்களின் நிபுணர்கள் ஒன்றிணைந்து , உற்பத்தி முதல் சந்தைப்படுத்துதல் மற்றும் லாபம் ஈட்டுவது வரை இந்த   கருத்தரங்கில் விரிவான வழிகாட்டுதல்களை வழங்க உள்ளனர் .       பாரம்பரிய விதைகளைப் பாதுகாப்பதோடு , அவற்றை வணிக ரீதியாக எப்படி லாபகரமாக மாற்றுவது என்பதை விவசாயிகளுக்கு நேரடியாகக் கொண்டு...