• கிருஷ்ணசாமி பள்ளி நிறுவனர் விழா.
· கிருஷ்ணசாமி பள்ளி நிறுவனரின் 115-வது பிறந்த நாள் விழா- மாணவர்களுக்கு பரிசு வழங்கல்.
வேலூர் கிருஷ்ணசாமி முதலியார் சீனியர் செகண்டரி பள்ளி நிறுவனர் கிருஷ்ணசாமி முதலியாரின் 115-வது பிறந்த நாள் விழா மற்றும் எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 பொது தேர்வில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கும் விழா நடைபெற்றது. விழாவிற்கு பள்ளி தாளாளர் த.சிவக்குமார் தலைமை தாங்கினார். முதல்வர் ஆர்.ஜி.சுஜாதா முன்னிலை வகித்தார்.
சிறப்பு விருந்தினராக வேலூர் சிவில் என்ஜினியர்கள் சங்க தலைவர் வி.எஸ்.அர்ஜுனன் கலந்து கண்டு பொது தேர்வுகளில் பள்ளி அளவில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டி பேசினார். விழாவில் டாக்டர் கார்த்திகேயன் கலந்து கொண்டு பேசினார் .
விழாவில் பள்ளி மேலாளர் துர்காதேவி, ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

Comments
Post a Comment