• விஐடியில் 28-ந் தேதி பாரம்பரிய காய்கறி, விதை திருவிழா.


 ·         விஐடியில் 28-ந் தேதி மண் காப்போம் இயக்கம் சார்பில் பாரத பாரம்பரிய காய்கறி மற்றும் விதை திருவிழா.

    வேலூர் ஈஷா யோகா மையத்தில் சத்குருவின் மண் காப்போம் இயக்க ஒருங்கிணைப்பாளர்  ஸ்ரீமுகா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

     அப்போது அவர் கூறியதாவது;

    காட்பாடியில் உள்ள வி..டி பல்கலைகழகத்தில் 28-ந் தேதி பாரத பாரம்பரிய காய்கறி மற்றும் விதை திருவிழா நடக்கிறது. பாரம்பரிய காய்கறி மற்றும் விதை உற்பத்தியில் முன்னோடியாக விளங்கும் விவசாயிகள் மற்றும் நாட்டின் முன்னணி வேளாண் ஆராய்ச்சி நிறுவனங்களின் நிபுணர்கள் ஒன்றிணைந்து, உற்பத்தி முதல் சந்தைப்படுத்துதல் மற்றும் லாபம் ஈட்டுவது வரை இந்த  கருத்தரங்கில் விரிவான வழிகாட்டுதல்களை வழங்க உள்ளனர்.

     பாரம்பரிய விதைகளைப் பாதுகாப்பதோடு, அவற்றை வணிக ரீதியாக எப்படி லாபகரமாக மாற்றுவது என்பதை விவசாயிகளுக்கு நேரடியாகக் கொண்டு சேர்க்கும் பாலமாக இந்த கருத்தரங்கம் அமையும்.

     விழாவிற்கு வி..டி  நிறுவனர் மற்றும் வேந்தர் ஜி. விசுவநாதன் தலைமை தாங்கி பேசுகிறார். துணைதலைவர்கள் சங்கர்விசுவநாதன், சேகர்விசுவநாதன் ஆகியோர் வாழ்த்துரை வழங்குகின்றனர். கலைமாமணி விருது பெற்ற  முத்தையா சிறப்புரையாற்ற உள்ளார்.

            சிறப்பு விருந்தினர்களாக பெங்களூருவில் உள்ள இந்திய தோட்டக்கலை ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநர் துசார்காந்தி பேஹேரா,  வி..டி விவசாய கண்டுபிடிப்புகள் மற்றும் மேம்பட்ட கற்றல் பள்ளியின் துறைதலைவர்  ராஜேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டு பேசுகின்றனர்.

     கருத்தரங்கில், இயற்கை விவசாயத்தில் செலவை குறைத்து தரமான காய்கறிகளை உற்பத்தி செய்து நல்ல பொருளாதார முன்னேற்றத்தை விவசாயிகளுக்கு வழங்கும் விதத்தில் முன்னோடி விவசாயிகள் மற்றும் வேளாண் நிபுணர்கள் கலந்து கொண்டு பேசுகின்றனர். கருத்தரங்கில் பங்கேற்கும் நிபுணர்கள் மற்றும் முன்னோடி விவசாயிகள் தங்களது அனுபவங்களை பகிர்ந்து கொள்ள உள்ளனர்.

            மத்திய அரசின் வேளாண் விரிவாக்க துறை இணைஇயக்குநர், முன்னோடி பூச்சியியல் வல்லுநர் செல்வம், பூச்சி மற்றும் நோய் மேலாண்மைக்கான எளிய தீர்வுகள் குறித்து விளக்குகிறார்.

     சென்னை 'தான்யம் ஆர்கானிக் சூப்பர் ஸ்டோர்' நிறுவனரும் தலைமை செயல் அதிகாரியுமான மதுசூதனன், இயற்கை விளை பொருட்களை சந்தைப்படுத்தி லாபம் ஈட்டும் முறைகள் மற்றும் தொழில்முனைவு வாய்ப்புகள் குறித்து பேசுகிறார்.

     சென்னையை சேர்ந்த .டி. துறையின் முன்னாள் ஊழியரும் இயற்கை விவசாயியுமான ஜனா சிவதாணு, கீரை சாகுபடி மூலம் ஆண்டுக்கு ரூ.18 லட்சம் வருமானம் ஈட்டியது குறித்து பகிர்ந்து கொள்கிறார். இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து சேகரிக்கப்பட்ட 2000-க்கும் மேற்பட்ட பாரம்பரிய விதை ரகங்கள் காட்சிபடுத்தப்பட உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

     பேட்டியின்போது தன்னார்வலர்கள் மணிவண்ணன், சதீஷ், சந்திரிகா, பிரதிப் ஆகியோர் உடன் இருந்தனர்.

 

Comments

Popular posts from this blog

• கீரை திருவிழா - மக்கள் நல சந்தை.

• ஆக்சிலியம் கல்லூரி போருக்கு எதிரான அமைதி பேரணி.

• PT LEE Employment Opportunities & Career Guidance Program.