• எஸ்ஆர்எம்-ல் தமிழ்ப்பேராயம் சார்பில் தமிழ் வளர்ச்சியில் வைணவத்தின் பங்கு பற்றிய தேசிய கருத்தரங்கம் - புதுச்சேரி அமைச்சர் லட்சுமி நாராயணன் தொடங்கினார்

 

     எஸ்ஆர்எம் பல்கலைக்கழகத்தில் தமிழ்ப்பேராயம் சார்பில் தமிழ் வளர்ச்சியில் வைணவத்தின் பங்கு பற்றிய ஒரு நாள் தேசிய கருத்தரங்கம் நடைபெற்றது. இதனை எஸ்ஆர்எம் பல்கலைக்கழகத்தின் நிறுவனர் வேந்தர் டாக்டர் தா.இரா.பாரிவேந்தர் எம்.பி. தலைமையில் புதுச்சேரி மாநில பொதுப்பணி துறை அமைச்சர் .லட்சுமி நாராயணன் தொடங்கி வைத்தார்.

      தமிழ் வளர்ச்சியில் சமயங்களுக்கு பெரும் பங்கு உள்ளது. சைவ சமயத்தைச் சேர்ந்த நாயன்மார்களும், வைணவ சமயத்தைச் சேர்ந்த ஆழ்வார்களும் அருளிய பாசுரங்கள் தமிழ் மொழியின் பொக்கிஷங்களாக போற்றப்படுகின்றன.

                 அவர்களின் அரிய தமிழ் பணிகளை அங்கீகரிக்கும் வகையில் எஸ்ஆர்எம் பல்கலைக்கழகத்தின் தமிழ்ப்பேராயம் சார்பில்  கடந்தாண்டு தமிழ் வளர்ச்சியில் சைவ ஆதீனங்களின் பங்கு என்ற தலைப்பில் தேசிய கருத்தரங்கம் நடத்தப்பட்டது. இவ்வாண்டு தமிழ் வளர்ச்சியில் வைணவத்தின் பங்கு என்பது பற்றிய தேசிய கருத்தரங்கம் நடத்தப்பட்டது.

      செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்குளத்தூர் எஸ்ஆர்எம் அறிவியல் தொழில்நுட்ப நிறுவனத்தின் (முன்னாள் எஸ்ஆர்எம் பல்கலைக்கழகம்) வளாகத்தில் நடைபெற்ற  இந்த கருத்தரங்கில் நாட்டின் பல்வேறு பகுதிகளிருந்து ஜீயர் ஸ்வாமிகள், வைணவ பீடங்களின் மடாதீபதிகள், வைணவ ஆலயங்களின் குருக்கள் என மேற்பட்டோர் பங்கேற்றனர்.

      கருத்தரங்கம் தொடக்க விழா முனைவர் தி.கணேசன்பொ சிற்றரங்கில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு வருகை தந்தவர்களை எஸ்ஆர்எம் அறிவியல் தொழில்நுட்ப நிறுவனத்தின் பதிவாளர் முனைவர் சு. பொன்னுசாமி வரவேற்றார்.

      கருத்தரங்கின் நோக்கம் பற்றி எஸ்ஆர்எம் தமிழ்ப்பேராயம் அமைப்பின் தலைவர் முனைவர் கரு.நாகராஜன் விளக்கி பேசுகையில் :

      தமிழ் வளர்ச்சியில் வைணவம் முக்கிய பங்கு வகிக்கிறது, திருமாலின் பெருமைகளை வைணவ பாசுரங்கள் எடுத்து கூறுகின்றன. சங்க இலக்கியங்கள், சிலப்பதிகாரம், அதற்க்கு பின்வந்த பல்வேறு நூல்கள் திருமாலின் பெருமைகளை எடுத்து கூறுகின்றன. நாயன்மார்கள் தேவாரம், திருவாசகம் பாடியுள்ளனர், ஆழ்வார்கள் திருமாலின் பெருமைகளை படியுள்ளனர்.

     தமிழ் வளர்ச்சியில் வைணவத்தின் பங்கு, சைவத்தின் பங்கு பற்றியும் ஆன்மிக இலக்கியம் பற்றி மாணவர்கள் அறிந்து கொள்ளும் வகையில் தேசிய அளவிலான கருத்தரங்கிணை இப்பல்கலைகழகத்தின் வேந்தர் ஏற்பாடு செய்து அதில் பல ஜீயர் ஸ்வாமிகள்  ஆச்சாரியர்கள் பங்கேற்று  வைணவத்தின் பெருமைகளை எடுத்துரைக்க ஏற்பாடு செய்துள்ளார். பக்தியையும் பழந்தமிழையையும் வளர்த்த பெருமை வைணவத்தை சேரும் என்றார். 

      நிகழ்ச்சிக்கு எஸ்ஆர்எம் வேந்தரும் பெரம்பலூர் மக்களவை உறுப்பினருமான டாக்டர் தா. இரா. பாரிவேந்தர் தலைமை வகித்து பேசுகையில் 

     நமக்கு மதமும் தெய்விகமும் வேண்டும். அதுபற்றி அறியவேண்டும். எஸ்ஆர்எம் என்றாலே பொறியியல், மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு படிப்புகளை கற்பிக்கும் நிறுவனம் என்று நாடு அறிந்துள்ள நிலையில் மாணவர்களுக்கு வேலை பெற்று தந்து விடுவதுடன் எங்கள் பணி முடியவில்லை.

      சைவ, வைணவ சமயங்களை பற்றியும், அவைகள்  தமிழ் வளர்ச்சியில் பங்கு பற்றியும் தெரியப்படுத்த வேண்டும். உலக அளவில் சிறந்த தமிழ் படைப்பாளிகளை சிறப்பிக்கும் வகையில் கடந்த 13 ஆண்டுகளாக எஸ்ஆர்எம் தமிழ்ப்பேராயம் மூலமாக விருதுகள் வழங்கி கௌரவித்து வருகிறோம்.

      மாணவர்களுக்கு  நல்ல ஒழுக்கம், பண்பாடு, மரியாதை பற்றி கற்று தர வேண்டுமானால் சமய நெறிகள் பற்றி எடுத்துரைக்க வேண்டும். அதற்காக கடந்தாண்டு நாட்டின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த 20 மடாதீபதிகள், ஆதினங்களை வரவைத்து தமிழ் வளர்ச்சியில் சைவத்தின் பங்கு என்பது பற்றிய பெரிய நிகழ்ச்சியை நடத்தினோம். அந்த நிகழ்ச்சியில் மடாதீபதிகள், ஆதினங்கள் எனக்கு ஒரு செங்கோல் வழங்கினார்கள். சிறந்த ஆட்சியாளர்களுக்கு அவர்களின் ஆட்சியை போற்றும் வகையில் செங்கோல் வழங்குவார்கள்.

     புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை ஆண்டுகளில் பிரதமர் நரேந்திர மோடி கட்டி முடித்து திறந்து வைத்துள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தலைவர் சபாநாயகர், அவையில் எல்லா தாரப்பினரையும் சமமாக கருதி அவையை சிறப்பாக நடத்த வேண்டும். அதை குறிக்கும் வகையில் அவர் இருக்கைக்கு அருகில் செங்கோல் ஒன்றை பிரதமர் திறந்து வைத்துள்ளார்.

      நல்ல சிந்தனை, தூய்மையான மனம் மாணவர்கள் ஆசிரியர்களுக்கு கிடைக்க ஆன்மிகம், பாசுரம் படிக்க வேண்டும். ஆன்மிகமும், தெய்விகமும் ஒன்றாக இருந்தால்தான் நாடு சுபிச்சம் பெரும் என்றார்.

      நிகழ்ச்சியில் புதுச்சேரி மாநில பொதுப்பணி மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் .லட்சுமி நாராயணன் பங்கேற்று கருத்தரங்கை தொடங்கி வைத்து பேசினார். அவர் பேசுகையில் :

      வைணவம் தமிழ் வளர்ச்சியில் எத்தகைய பங்கு வகித்துள்ளன என்பது பற்றி இந்த நிகழ்ச்சியில் அருள் உரை வழங்கிய ஜீயர்களும், ஆச்சாரியர்களும் எடுத்து கூறினர். சைவமும் வைணவமும் தமிழ் வளர்ச்சியில் ஆற்றியுள்ள பங்கிணை ஒரு சேர எஸ்ஆர்எம் பல்கலைக்கழகம் நடத்தி காட்டியுள்ளன. சமயத்தின் இரு கண்களாக சைவமும் வைணவமும் உள்ளன என்பதை இங்கு நடந்த நிகழ்வுகள் எடுத்து கூறியுள்ளன. பல்வேறு இலக்கியங்கள் தமிழில் இருந்தும் ஆன்மிக இலக்கியங்கள்தான் தமிழின் பெருமையை பறைசாற்றுகின்றன என்றார்.

      கருத்தரங்கில் மன்னார்குடி ராமானுஜ ஜீயர் ஸ்வாமிகள், வீரவநல்லூர் குலசேகர ராமானுஜ மடம் ராம அப்றமேய ஜீயர் ஸ்வாமிகள், ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ மணவாள மாமுணிகள் மடம் சடகோப ராமானுஜ ஜீயர் ஸ்வாமிகள், திருவரங்கம் கோயில் பெரிய நம்பி ஸ்ரீ சுந்தர்ராஜசாரி ஸ்வாமி மற்றும் ராமானுஜ ஜீயர் ஸ்வாமிகள், எஸ்ஆர்எம் அறிவியல் தொழில்நுட்ப நிறுவனத்தின் திண்டிவனம் கம்பன் கழகம் பொதுச்செயலாளர் முனைவர் .ஞானஜோதி சரவணன் உள்ளிட்ட பலர் பங்கேற்று பேசினர். முடிவில் எஸ்ஆர்எம் தமிழ் துறை தலைவர் முனைவர் . ஜெயகனேஷ் நன்றி கூறினார்.

 

Comments

Popular posts from this blog

• பெ.தெ.லீ. பாலிடெக்னிக் கல்லூரியில் “மெக்கத்லான் 2024.

• வேலூர் ஜெய்பீம் இரவு பள்ளி கூட்டமைப்பு "ஐம்பெரும் விழா”.