• தொழிற்கல்வி ஆசிரியர் கழகம் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி - கோரிக்கை
· நீதிமன்ற தீர்ப்புகளை நடைமுறைபடுத்தி அரசாணை வெளியிட்ட தமிழ்நாடு அரசுக்கு நன்றி தெரிவித்தும் தேர்தல் அறிக்கையில் தெரிவித்துள்ள தொழிற்கல்வி ஆசிரியர் தொடர்பான கோரிக்கைகளை நிறைவேற்றிடவும் தமிழ்நாடு அரசுக்கு தொழிற்கல்வி ஆசிரியர் கழகம் கோரிக்கை . தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தொழிற்கல்வி ஆசிரியர் கழகத்தின் வழக்கு குழுவின் ஆலோசனைக் கூட்டம் மற்றம் பொதுக்குழு கூட்டம் வேலூர் காட்பாடியில் நடைபெற்றது . கூட்டத்திற்கு மாநிலத்தலைவர் செ . நா . ஜனார்த்தனன் தலைமை தாங்கினார் . முன்னதாக மாவட்ட பொருளாளர் எம் . பாண்டுரெங்கன் வரவேற்று பேசினார் . ஒருங்கிணைப்பாளர் எஸ் . சச்சிதானந்தம் , ஆர் . மகாலிங்கம் மகளிர் அணி செயலாளர் டி . சாந்தி ஆகியோர் முன்னிலை வகித்து பேசினார் . வழக்கு குழு தலைவர் சோ . சம்பத் வழக்கின் நிலை குறித்தும் நீதிமன்றத்தில் வழங்கப்பட்ட தீர்புகள் குறித்தும...