• தொழிற்கல்வி ஆசிரியர் கழகம் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி - கோரிக்கை

 

·         நீதிமன்ற தீர்ப்புகளை நடைமுறைபடுத்தி அரசாணை வெளியிட்ட தமிழ்நாடு அரசுக்கு நன்றி தெரிவித்தும் தேர்தல் அறிக்கையில் தெரிவித்துள்ள தொழிற்கல்வி ஆசிரியர் தொடர்பான கோரிக்கைகளை நிறைவேற்றிடவும் தமிழ்நாடு அரசுக்கு தொழிற்கல்வி ஆசிரியர் கழகம் கோரிக்கை.

      தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தொழிற்கல்வி ஆசிரியர் கழகத்தின் வழக்கு குழுவின் ஆலோசனைக் கூட்டம் மற்றம் பொதுக்குழு கூட்டம் வேலூர் காட்பாடியில் நடைபெற்றது.

      கூட்டத்திற்கு மாநிலத்தலைவர் செ.நா.ஜனார்த்தனன் தலைமை தாங்கினார்.  முன்னதாக மாவட்ட பொருளாளர் எம்.பாண்டுரெங்கன் வரவேற்று பேசினார்.  ஒருங்கிணைப்பாளர் எஸ்.சச்சிதானந்தம், ஆர்.மகாலிங்கம் மகளிர் அணி செயலாளர் டி.சாந்தி ஆகியோர்  முன்னிலை வகித்து பேசினார்.

       வழக்கு குழு தலைவர் சோ.சம்பத் வழக்கின் நிலை குறித்தும் நீதிமன்றத்தில் வழங்கப்பட்ட தீர்புகள் குறித்தும் பேசினார்.

          மாவட்ட நிர்வாகிகள் டி.எல்.ஜெயபிரகாஷ் எஸ்.ஜேம்ஸ்தாசு, வி.பலராமன், எம்.நசீர்அகமது, ஜி.தமிழ்செல்வி, வி.பாலச்சந்தர், எஸ்.தணிகைவேலு, சு.சோமாஸ்கந்தன், ஜெ.சந்தானம், ஜி.புவனேஸ்வரி, ஆர்.சொக்கலிங்கம்பிள்ளை உள்ளிட்டோர் பேசினர்.

                 பல்வேறு வழக்குகளை தொடரவும் அதில் வெற்றி பெறவும் அனைத்து வகையிலும் உதவிகள் செய்த வழக்கு குழு தலைவர் சோ.சம்பத் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டார்.

     மாநில தலைவர் செ.நா.ஜனார்த்தனன் மாநில மாவட்ட செயல்பாடுகளை விளக்கி பேசினார்.  அப்போது அவர் கூறியதாவது..

      தமிழகத்தில் பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வரும் தமிழக முதல்வர் மாண்புமிகு மு..ஸ்டாலின் அவர்கள் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு வருகிறார்.  இது போலவே தொழிற்கல்வி ஆசிரியர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றிட வேண்டுகின்றோம்.  சென்னை மற்றும் மதுரை கிளை உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்புரைகளை நடைமுறைபடுத்தியும் அரசின் உறுதிமொழியின் படியும் தொகுப்பூதிய காலத்தில் 50 சதவிகித காலத்தினை பணிக்காலமாக கருதி ஓய்வூதியம் வழங்கிட உரிய ஆணைகள் பிறப்பிக்க வேண்டுகின்றோம்.  கடந்த 2007ஆம் ஆண்டிற்கு பிறகு ஏற்பட்ட தொழிற்கல்வி ஆசிரியர் பணியிடங்கள் நிறபப்படாமல் உள்ளது இதனால் மெல்ல கற்கும் மாணவர்கள் இடை நிற்கும் நிலை ஏற்படுகிறது இதனை தவிற்கும் வகையில் தொழிற்கல்வி பாடப்பிரிவு மூடப்பட்ட அனைத்து மேல்நிலை பள்ளிகளிலும் தொழிற்கல்வி பாடத்தினை கட்டாய பாடமாக்க வேண்டும் தற்போது காலியாக உள்ள 1000 தொழிற்கல்வி ஆசிரியர் பணியிடங்களை நிரப்பிட வேண்டும் என்றார்.

 பின்னர் பின்வரும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

 1.            நீதிமன்ற தீர்ப்பினை நடைமுறைபடுத்தி தொகுப்பூதிய காலத்தில் 50 சதவிகிதம் கணக்கில் எடுத்துக்கொண்டு ஓய்வூதியம் வழங்கிட அரசாணை வெளியிட்ட மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு..ஸ்டாலின் அவர்களுக்கும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்களுக்கும் மனமார்ந்த நன்றியினை தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதுபோலவே நீதிமன்றத்தில் வழக்கு தொடராத தொழிற்கல்வி ஆசிரியர்களின் 50 விழுக்காடு பகுதிநேர பணிக்காலத்தை ஓய்வூதியம் நிர்ணயிப்பதற்கு கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும் என்ற தேர்தல் வாக்குறுதிக்கு  உரிய நடவடிக்கை உடன் மேற்கொண்டு தமிழக அரசு ஆணைகள் வழங்கிட கோருகின்றோம்.  

 2.            மேல்நிலைப்பள்ளிகளில் மேல்நிலை வகுப்புகளுக்கு பாடம் போதித்து வரும் தொழிற்கல்வி ஆசிரியர் என்ற பெயரை முதுகலை தொழிற்கல்வி ஆசிரியராக மாற்றி அறிவிக்க வேண்டுகின்றோம்

 3.            நிலுவையில் உள்ள 171 தொழிற்கல்வி ஆசிரியர்களுக்கு முறையான காலமுறை ஊதியம் வழங்கிட கோருகின்றோம். 

 4.            தேர்தல் அறிக்கை பக்கம்-84 பத்தி-311ல் தெரிவித்துள்ளபடியும் முதுகலை ஆசிரியருக்கு இணையான ஊதியம் தொழிற்கல்வி ஆசிரியர்களுக்கும் உடனே வழங்கிட தமிழக அரசை கோருகின்றோம்.                                                

 5.            தமிழகம் முழுவதும் காலியாக உள்ள 1000 தொழிற்கல்வி ஆசிரியர் பணியிடங்களை நிரப்பிட வேண்டும்.

 6.            தொழிற்கல்வி ஆசிரியர்கள் பணி ஓய்வு பெற்றால் அப்பள்ளியில் தொழிற்கல்வி பாடப்பிரிவு மூடப்படும் நிலை தடுக்கப்பட வேண்டும்.

பொதுவான கோரிக்கைகள்

 7.            ஜீவாதாரமான கோரிக்கையான புதிய ஓய்வூதிய திட்டத்தினை இரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டம் நடைமுறைப்படுத்த வேண்டுமென தமிழக முதலமைச்சரை கேட்டுக்கொள்கின்றோம்.

 8.            முடக்கப்பட்டுள்ள சரண் விடுப்பினை பணமாக்கும் உரிமையை மீண்டும் வழங்கிட வேண்டும்

 முடிவில் தணிக்கையாளர் எஸ்.தணிகைவேல் நன்றி கூறினார்.

 

 

Comments

Popular posts from this blog

• பெ.தெ.லீ. பாலிடெக்னிக் கல்லூரியில் “மெக்கத்லான் 2024.

• வேலூர் ஜெய்பீம் இரவு பள்ளி கூட்டமைப்பு "ஐம்பெரும் விழா”.