• “வாழ்ந்து காட்டுவோம்” திட்டத்தின் மூலம் 30% மானியத்துடன் கூடிய வங்கி கடன் - மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.பெ.குமாரவேல்பாண்டியன்

வேலூர் மாவட்டத்தில் கீ..குப்பம் வட்டாரங்களை சார்ந்த 21 வயதுமுதல் 45 வயதுவரை உள்ள சுயஉதவிக்குழு மற்றும் அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் சுயதொழில் தொடங்க வாழ்ந்துகாட்டுவோம் திட்டத்தின் மூலமாக 30%  மானியத்துடன் கூடிய வங்கி கடனை பெற விண்ணப்பிக்கலாம்.

இத்திட்டத்தில் 10% பயனாளிகளின் பங்களிப்பு 60% வங்கி கடன் 30% திட்டமானியத்துடன் நுண், குறு, சிறு என்ற தொழில்களின் அடிப்படையில் தொழில்கடன் வழங்கப்பட்வுள்ளது. 5 இலட்சம் மதிப்பிலான தொழில் திட்டம் நுண்தொழிலாகவும் 5 இலட்சம் முதல் 15 இலட்சம் வரையுள்ள தொழில் திட்டம் குறுதொழிலாகவும் 15 இலட்சத்திற்கும் மேல் உள்ள தொழில் திட்டம் சிறுதொழிலாகவும் வாழ்ந்துகாட்டுவோம் திட்டத்தின் மூலம் வரையறுக்கப்பட்டுள்ளது. சேவை மற்றும் உற்பத்தி சார்ந்த தொழிலுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

இத்திட்டத்தின் சிறப்பு சலுகையாக மாற்றுத்திறனாளிகள், கணவனை இழந்தோர், ஆதரவற்ற பெண்கள் மற்றும் நலிவுற்றோர்கள் தொழில் தொடங்க திட்ட மதிப்பில் 5 % மட்டுமே பயனாளிகளின் பங்களிப்பாக இருந்தால் போதும்.

இணை மானிய திட்ட கடன் முகாம் ஒவ்வொரு மாதமும் முதல் புதன்கிழமை கீ..குப்பம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் முகாம் நடைபெறும்.

                மேலும் பிற விபரங்களுக்கு வாழ்ந்துகாட்டுவோம் திட்டத்தில் செயல்படுத்தப்படும் மதிசிறகுகள் தொழில் மைய அலுவலர்கள் (9941866173 &9994509225) எண்ணைத் தொடர்பு கொள்ளலாம்  என மாவட்ட ஆட்சித்தலைவர் பெ.குமாரவேல்பாண்டியன் தெரிவித்துள்ளார்.

Comments

Popular posts from this blog

• வேலூரில் டெய்ட்கோ ஃபவுண்டேஷன் 4-வது மாநில மாநாடு.

• வேலூர் ஜெய்பீம் இரவு பள்ளி கூட்டமைப்பு "ஐம்பெரும் விழா”.

• பெ.தெ.லீ. பாலிடெக்னிக் கல்லூரியில் “மெக்கத்லான் 2024.