• வேலூர் மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமைத்திட்டம் விண்ணப்பங்கள் பதிவு செய்யும் சிறப்பு முகாம்கள்

                வேலூர் மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமைத்திட்டம் விண்ணப்பங்கள் பதிவு செய்யும் சிறப்பு முகாம்கள் முதல்கட்டமாக 418 நியாய விலை கடைகளுக்கு கடந்த 24.07.2023-ம் தேதி முதல் அனைத்து வட்டங்களிலும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது . இந்த முதற்கட்ட முகாமானது 02.08.2023 அன்று வரை நடைபெறும். இந்த முகாம்களில் குடும்ப அட்டை எண்ணிக்கையின் அடிப்படையில் அந்த பகுதி மக்களுக்கு, விண்ணப்பபதிவு செய்யும் நாள், நேரம் மற்றும் முகாம் நடைபெறும் ஆகிய விவரங்கள்அடங்கிய டோக்கன்கள் வழங்கப்பட்டுள்ளது. டோக்கன்களில் தெரிவிக்கப்பட்ட நாளில் விண்ணப்பபதிவு மேற்கொள்ளாத விடுபட்ட விண்ணப்பதாரர்களுக்கு வருகின்ற 03.08.2023 மற்றும் 04.08.2023ம்  தேதிகளில் அந்தந்த மையங்களில் சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளன. இந்த சிறப்பு முகாம் நாட்களை பயன்படுத்தி, விடுபட்ட அனைத்து குடும்ப அட்டைதாரர்களும் தங்களது விண்ணப்பங்களை, ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள முகாம்களுக்கு சென்று விண்ணப்பங்களை பதிவு செய்து கொள்ளுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் பெ.குமாரவேல் பாண்டியன் தெரிவித்துள்ளார்.

                                                                                                                                                                       

 

Comments

Popular posts from this blog

• வேலூரில் டெய்ட்கோ ஃபவுண்டேஷன் 4-வது மாநில மாநாடு.

• வேலூர் ஜெய்பீம் இரவு பள்ளி கூட்டமைப்பு "ஐம்பெரும் விழா”.

• பெ.தெ.லீ. பாலிடெக்னிக் கல்லூரியில் “மெக்கத்லான் 2024.