• தமிழகத்தில் உள்ள 186 எச்.ஐ.வி. ஆலோசனை மற்றும் பரிசோதனை மையத்தை மூடும் மத்திய அரசின் சுற்றறிக்கையை கண்டித்து தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுபாட்டு சங்க ஊழியர்கள் ஆர்பாட்டம்.

 

     வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் சர்பில் அனைத்து ஊழியர் நல சங்க மாநில மையம் சார்பிலும் மாநில தலைவர் ஜெயந்தி தலைமையில் ஆர்பாட்டம் நடைபெற்றது.

    ஆண்டுதோறும் அதிக அளவில் எச்.ஐ.வி. நோயால் மக்கள் பாதிக்கப்படுகின்றனர். கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் இந்தியா முழுவதும் இந்நோயால் 17 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த எய்ட்ஸ் ஆலோசனை மற்றும் பரிசோதனை மையங்களை தனியார் மயமாக்கும் முயற்சியை கைவிட வேண்டும். இதனால் மாத்திரைகள் சரியாக கிடைக்காமல் எச்.ஐ.வி. நோயாளிகள் பாதிக்கப்படுகின்றனர். உயிரிழப்புகளும் அதிகரிக்கிறது.

                 தமிழகத்தில் உள்ள 186 எய்ட்ஸ் ஆலோசனை மற்றும் பரிசோதனை  மையத்தை மூடும் சுற்றறிக்கையை மத்திய அரசு திரும்ப பெற கோரியும், அரசு ஆரம்ப சுகாதார நிலைய ஊழியர்களுக்கு 10 சதவிகிதம் ஊதிய உயர்வு அளிக்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்பாட்டம் நடைபெற்றது.

 பேட்டி: ஜெயந்தி (தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுபாட்டு சங்க ஊழியர்கள்)

 

Comments

Popular posts from this blog

• வேலூரில் டெய்ட்கோ ஃபவுண்டேஷன் 4-வது மாநில மாநாடு.

• வேலூர் ஜெய்பீம் இரவு பள்ளி கூட்டமைப்பு "ஐம்பெரும் விழா”.

P.T.LEE கல்லூரி முதலாம் ஆண்டு வகுப்புகள் தொடக்க விழா.