• வேலூர் மாவட்டத்தில் கேந்திரிய வித்யாலயா மற்றும் சைனிக் பள்ளிகளை அரசு அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - முப்படை வீரர்கள் நல சங்க கூட்டத்தில் தீர்மானம்.

 

     வேலூர் மாவட்டம், அணைக்கட்டில் முன்னாள் முப்படை ராணுவ வீரர்கள் சங்கம் சார்பில் கூட்டம் மாவட்ட தலைவர் வேலாயுதம் தலைமையில் நடைபெற்றது. இதில் துணைதலைவர் சரவணன், செயலாளர் தேசியமணி, மாவட்ட தலைவர் சுப்பிரமணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

      இக்கூட்டத்தில் வேலூர் மாவட்டத்தில் முப்படை வீரர்கள் சங்கத்தின் 19 பிரிவுகள் உள்ளது. இவர்களுக்கு நாங்கள் சமூக சேவை செய்து வருகிறோம். அதிகாரிகளும் குறைகளை தீர்க்கின்றனர்.

          வேலூர் முப்படை வீரர்கள் விற்பனை கேண்டினுக்கு செல்ல வழியில்லை. இதுகுறித்து ஆட்சியரிடம் புகார் அளித்துள்ளோம். அவரும் அதனை செய்து தருவதாக சொல்லியுள்ளார். ரயில்வே டெண்டர் முடிந்தவுடன் சாலை அமைக்கப்படும் என தெரிவித்துள்ளனர்.

            மேலும் முப்படை வீரர்களுக்கான மருத்துவமனை அமைத்து தர வேண்டும். கேந்திரய வித்யாலயா பள்ளி மற்றும் சைனிக் பள்ளிகளை துவங்க அரசு துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

 பேட்டி: சுப்பிரமணி (முப்படை வீரர்கள் சங்கமாவட்டத்தலைவர்)

 

Comments

Popular posts from this blog

• பெ.தெ.லீ. பாலிடெக்னிக் கல்லூரியில் “மெக்கத்லான் 2024.

• வேலூர் ஜெய்பீம் இரவு பள்ளி கூட்டமைப்பு "ஐம்பெரும் விழா”.