• தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் அண்ணல் அம்பேத்கர், முத்தமிழறிஞர் கலைஞர் ஆகியோரின் பிறந்த நாளை முன்னிட்டு வேலூர் மாவட்ட அளவில் பள்ளி, கல்லூரி மாணாக்கர்களுக்கான பேச்சுப்போட்டிகள் மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார்.

                தமிழ்நாடு அரசு, தமிழ் வளர்ச்சித் துறையின் 2021-22ஆம் ஆண்டிற்கான மானியக்கோரிக்கை அறிவிப்பிற்கிணங்க 2023-24ஆம் ஆண்டில் அனைத்து மாவட்டங்களிலும் அண்ணல் அம்பேத்கர், முத்தமிழறிஞர் கலைஞர் ஆகியோரின் பிறந்த நாளை முன்னிட்டு அனைத்துப் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவியருக்கு தனித்தனியே பேச்சுப்போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுத்தொகை மற்றும் பாராட்டுச்சான்றிதழ் வழங்கப்படும் என்ற அறிவிப்பிற்கிணங்க

                 வேலூர் மாவட்டத்தில் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு 01.08.2023 செவ்வாய்க்கிழமையன்றும், முத்தமிழறிஞர்  கலைஞர் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு 02.08.2023 புதன்கிழமையன்றும் வேலூர் மாவட்டத்தில் செயற்பட்டு வரும் அனைத்து பள்ளிகளில்  பயின்று வரும் மாணாக்கர்களுக்கும் (6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு முடிய) மற்றும் அனைத்துக் கல்லூரிகளில் பயின்றுவரும் மாணாக்கர்களுக்கும் தனித்தனியே அரசு விதிமுறைகளின்படியும், சமூக இடைவெளியைப் பின்பற்றியும் மாவட்ட அளவிலான பேச்சுப்போட்டிகள் வேலூர், அரசு முஸ்லிம் மேல்நிலைப்பள்ளி வளாகக் கூட்ட அரங்கில் நடத்தப்பெறவிருந்தன. 

           வேலூர் மாவட்ட அளவிலான பள்ளிகளில் 6 முதல் 12ஆம் வகுப்பு வரை பயிலும் மாணாக்கர்களுக்கு முதல் பருவத்தேர்வு 01.08.2023, 02.08.2023 ஆகிய நாள்களில் முதல் பருவத்தேர்வு நடைபெறவுள்ளதால்  பள்ளி மாணாக்கர்களுக்கான போட்டிகள் மட்டும் 01.08.2023, 02.08.2023 ஆகிய நாள்களுக்கு பதிலாக  08.08.2023 (அண்ணல் அம்பேத்கர் பிறந்தநாள் போட்டி), 09.08.2023 (முத்தமிழறிஞர் கலைஞர்  பிறந்தநாள் போட்டி) ஆகிய நாள்களில் நடைபெறும் என்றும் கல்லூரி மாணாக்கர்களுக்கான போட்டிகள் எவ்விதமாறுதலுமின்றி 01.08.2023 மற்றும் 02.08.2023 ஆகிய  நாள்களில் ஏற்கனவே திட்டமிட்டபடி நடைபெறும் என்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் பெ.குமாரவேல்பாண்டியன் தெரிவித்துள்ளார்.

Comments

Popular posts from this blog

• பெ.தெ.லீ. பாலிடெக்னிக் கல்லூரியில் “மெக்கத்லான் 2024.

• வேலூர் ஜெய்பீம் இரவு பள்ளி கூட்டமைப்பு "ஐம்பெரும் விழா”.