• P.T.Lee செங்கல்வராய நாயக்கர் பொறியியல் கல்லூரியில் மாணவர் விடுதி திறப்பு விழா!

 

      சென்னை, வேப்பேரியை தலைமை இடமாகக் கொண்டு வள்ளல் P.T.Lee செங்கல்வராய நாயக்கர் அறக்கட்டளை செயல்பட்டு வருகிறது. இந்த அறக்கட்டளையின் கீழ் பல்வேறு கல்வி நிறுவனங்கள் மற்றும் தொண்டு நிறுவனங்கள் செயல்பட்டுக் கொண்டு வருகிறது.

             இதன் ஒரு அங்கமாக, காஞ்சிபுரம் மாவட்டம் ஊவேரிசத்திரம் கிராமத்தில் அமைந்துள்ள P.T.Lee செங்கல்வராய நாயக்கர் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரி கடந்த 23 ஆண்டு காலமாக வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது.

                இக்கல்லூரியில், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்து பயிலும் மாணவர்களுக்கு இலவச விடுதி வசதி செய்து தரப்பட்டுள்ளது. எனவே மாணவர்களின் நலன் கருதி, கூடுதலாக 150  மாணவர்கள் பயன்பெறும் வகையில் 25,000 சதுர அடி பரப்பளவில் 28 புதிய அறைகள், படிப்பகம், தொலைக்காட்சி அறை மற்றும் விருந்தினர்கள் அறை என விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.

     இந்த புதிய கூடுதல் தளத்தை, அறக்கட்டளையின் தலைவரும் மற்றும் முன்னாள் நீதியரசர் பொன்.கலையரசன் காணொளி வாயிலாக திறந்து வைத்தார்.

                இவ்விழாவிற்கு, அறக்கட்டளையின் அறங்காவலர்கள் எல்.அருள், மருத்துவர் சி.வேணி, முனைவர் கே.ராமலிங்கம்,  எம்.ராஜேந்திரன், முன்னாள் மாவட்ட ஆட்சியர் வி.சந்திரசேகரன், கே.ஜெகநாதன், முனைவர் கே.மின்ராஜ், மருத்துவர் ஆர்.கண்ணையன் மற்றும் அறக்கட்டளையின் செயலாளர்   பி.சுந்தரம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

                 இவ்விழாவிற்கு வருகை புரிந்த அனைவரையும் கல்லூரி முதல்வர் முனைவர் பி.பழனிசாமி வரவேற்று பேசினார். முன்னிலை வகித்த அனைத்து அறங்காவலர்களும் துறைத்தலைவர்களால் பொன்னாடை அணிவித்து கவுரவிக்கப்பட்டனர்.

     தமிழ்நாடு தொழில் நுட்ப இயக்கத்தின் முன்னாள் இயக்குனர் மற்றும் கல்லூரியின் இயக்குனருமான முனைவர் எம்.அருளரசு, கல்லூரி வரலாறு பற்றிய காணொளியை அறங்காவலர்களுக்கு எடுத்துரைத்தார்.

     அறங்காவலர் ஜெகநாதன் மாணவர்களின் முன்னேற்றத்தில் பேராசிரியர்களின் பங்கு மற்றும் முக்கியத்துவம் பற்றி எடுத்துரைத்தார். அறங்காவலர் மற்றும் முன்னாள் மாவட்ட ஆட்சியர் வி.சந்திரசேகரன் கல்லூரியின் உள்கட்டமைப்பு மேம்பாடு பற்றியும் எதிர்கால திட்டங்கள் பற்றியும் எடுத்துரைத்தார்.

      விழாவின் இறுதியில் இயந்திரவியல் துறை தலைவர் முனைவர் பூபதி  நன்றி உரையாற்றினார்.

      இவ்விழாவில், அறக்கட்டளை பொறியாளர்  ஜே.முத்துக்குமரன், துறை தலைவர்கள், பேராசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

 

Comments

Popular posts from this blog

• கீரை திருவிழா - மக்கள் நல சந்தை.

• அடுக்கம்பாறையில் நர்வம் கிட்ஸ் மழலையர் பள்ளி .

• வேலூர் வாசகர் வட்டம் - டாக்டர் அப்துல்கலாம் பிறந்த நாள் விழா.