• வேலூர் தந்தை பெரியார் அரசு பொறியியல் கல்லூரியில் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப திறன் மேம்பாட்டு திட்ட பயிற்சி

 வேலூர் தந்தை பெரியார் அரசு பொறியியல் கல்லூரியில் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப திறன் மேம்பாட்டு திட்ட பயிற்சி - மாவட்ட ஆட்சித்தலைவர் தொடங்கி வைத்தார்.

                தொழில்துறை தேவைகளுக்கான அறிவியல் மற்றும் தொழில்நுட்ப திறன் மேம்பாட்டு திட்ட பயிற்சியை மாவட்ட ஆட்சித்தலைவர் பெ.குமாரவேல்பாண்டியன் இன்று (29.08.2023) தந்தை பெரியார் அரசு பொறியியல் கல்லூரியில் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது.

                தமிழ்நாடு அரசின் சார்பில் ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள பொறியியல் கல்லூரிகளில் இறுதி ஆண்டு பயிலும் மாணவ-மாணவிகளுக்கு வேலை வாய்ப்பு குறித்த தொழில்நுட்ப பயிற்சி மற்றும் திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கும் வகையில் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

                அந்த வகையில் வேலூர் மாவட்டத்திலுள்ள பொறியியல் கல்லூரிகளில் ஒவ்வொறு துறையிலிருந்தும் இறுதி ஆண்டு பயிலும் 3 மாணவ-மாணவிகள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி மற்றும் கருத்தரங்கம் தந்தை பெரியார் பொறியியல் கல்லூரியில் இன்று நடத்தப்படுகிறது.

                இந்த பயிற்சி கருத்தரங்கமானது பொறியியல் பயிலும் மாணாக்கர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இறுதி ஆண்டு முடித்து செல்லும் மாணாக்கர்கள் தங்களின் வேலைவாய்ப்புகள் குறித்து தெளிவாக அறிந்து கொள்ள வேண்டும். பொறியியல் துறையில் வேலைவாய்ப்புகள் பரவி கிடக்கின்றன. அதை சரியான முறையில் தேர்ந்தெடுத்து நாம் பயன்படுத்தி கொள்ள வேண்டும்.

                கடந்த 30 ஆண்டுகளாக தமிழ்நாடு ஆட்டோமொபைல் மற்றும் அதன் உதிரி பாகங்கள் உற்பத்தியில் சிறந்து விளங்குகிறது. குறிப்பாக சென்னை தென்னிந்தியாவின் டெட்ராய்டு என அழைக்கப்படுகிறது. அமெரிக்காவில் உள்ள டெட்ராய்டு நகரம் உலகின் சிறந்த ஆட்டோமொபைல் உற்பத்தி நகரமாக திகழ்கிறது. சென்னையை சுற்றி உள்ள ஸ்ரீபெரும்புதூர், ஒரகடம் மற்றும் கும்மிடிபூண்டி ஆகிய இடங்களை மோட்டார் வாகன உற்பத்தி மற்றும் உதிரி பாகங்கள் உற்பத்தி தொழிற்சாலைகள் அதிக அளவில் உள்ளன. இதன் மூலம் தமிழ்நாட்டில் பொறியியல் மற்றும் தொழில்நுட்பம் பயிலும் மாணாக்கர்களுக்கு சிறந்த வேலைவாய்ப்பு கிடைக்கிறது.

                தமிழ்நாடு அரசின் சார்பில் சுயமாக தொழில்புரிய முனைப்புடன் உள்ள பட்டதாரிகளுக்கு சிறிய தொழிற்சாலைகள் தொடங்க பல்வேறு வங்கி கடனுதவிகளும் வழங்கப்படுகிறது. பொறியியல் பட்டதாரிகள் அரசின் இத்திட்டத்தை பயன்படுத்தி பெரிய தொழிற்சாலைகளுக்கு  தேவையான உதிரிபாகங்கள் போன்ற தேவைகளை உற்பத்தி செய்யும் சிறுதொழிற்சாலைகளை அமைத்து சுயதொழில் முனைவோராகவும், அதன் மூலம் பிறருக்கு வேலைவாய்ப்பினை வழங்கவும் வாய்ப்புள்ளது. எனவே, பொறியியல் பட்டதாரிகள் இந்த திறன் மேம்பாட்டு பயிற்சிகளை சிறப்பாக பயன்படுத்தி கொண்டு எதிர்காலத்தில் நல்ல வேலைவாய்ப்பினை பெற்று பயனடைய வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் பெ.குமாரவேல்பாண்டியன் தெரிவித்தார்.

                முன்னதாக மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் இக்கூட்டத்தில் கலந்து கொண்ட பொறியியல் மாணவர்களுடன் மின்னியல், மின்காந்தவியல், விண்வெளி அறிவியல் மற்றும் அணுக்களின் பண்புகள் குறித்து கலந்துரையாடி அவர்களின் ஐயங்களுக்கு பதில் அளித்தார்.

                இந்நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் முனைவர்.ஸ்ரீராம் பாபு, திட்ட ஒருங்கிணைப்பாளர் முனைவர்.மாரிராஜ் மோகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

 

Comments

Popular posts from this blog

• வேலூரில் டெய்ட்கோ ஃபவுண்டேஷன் 4-வது மாநில மாநாடு.

• வேலூர் ஜெய்பீம் இரவு பள்ளி கூட்டமைப்பு "ஐம்பெரும் விழா”.

• பெ.தெ.லீ. பாலிடெக்னிக் கல்லூரியில் “மெக்கத்லான் 2024.