• வேலூர் மாநகராட்சி - அதிமுக, பாமக, பத்திரிகையாளர்கள் வெளிநடப்பு .

 ·         வேலூர் மாநகராட்சியில் எந்த பணிகளும் நடக்கவில்லை என அதிமுக, பாமக குற்றச்சாட்டு கூட்டத்திலிருந்து வெளிநடப்பு .

·         பத்திரிகையாளர்களையும் வெளியேற சொன்னதால் வெளிநடப்பு.

·         திமுக கவுன்சிலர்களே எந்த பணியும் நடைபெறவில்லை என குற்றம்சாட்டியதால் பரபரப்பு.

      வேலூர் மாநகராட்சியின் கூட்டம் மேயர் சுஜாதா தலைமையில் நடைபெற்றது. இதில் மாநகராட்சி ஆணையர் ரத்தினசாமி உள்ளிட்ட அதிகாரிகளும், கவுன்சிலர்களும் கலந்து கொண்டனர்.

      இந்த மாநகராட்சியில் சாலை பணிகள் சரியாக நடக்கவில்லை. கடும் குடிநீர் தட்டுபாடு உள்ளது. கோடி கணக்கில் நிதி ஒதுக்கீடு செய்தும் எந்த பணிகளும் நடக்கவில்லை என திமுக கவுன்சிலர்களே குற்றம்சாட்டி பேசினார்கள்.

         எதிர்க்கட்சியினருக்கு பேச வாய்ப்பளிக்கபடவில்லை எனவும், 90 நாட்களுக்கு பிறகுதான் மாமன்ற கூட்டம் கூட்டப்பட்டது. எந்த குறையையும் பேச வாய்ப்பளிக்கவில்லை. வார்டுகளில் எந்த பணிகளும் நடக்கவில்லை. ஆனால் மாநகராட்சி கூட்டத்தையும் சரியாக கூட்டி திட்டங்கள் செயல்படுத்துவதில்லை.

             மாநகராட்சி பகுதிகளில் தெரு விளக்குகள் இல்லை. மக்கள் தேர்வு செய்த கவுன்சிலர்கள் எங்களைதான் கேட்கிறார்கள். பதில் சொல்ல முடியாமல் நாங்கள் தலைமறைவாகிறோம். கோடி கோடியாக ஒதுக்கப்பட்ட பணம் என்ன ஆனது என சரமாரியாக கேள்வி கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனை படம்பிடித்த செய்தியாளர்களை மேயர் சுஜாதா வெளியேற சொன்னார். இதனால் பத்திரிகையாளர்கள் வெளிநடப்பு செய்தனர்.

         பின்னர் சிறிது நேரத்தில் மாமன்றத்தில் இருந்து அதிமுக, பாமக, கவுன்சிலர்களும் வெளிநடப்பு செய்தனர். இதுவரையில் தங்கள் வார்டுகளில் எந்த பணிகளும் நடக்கவில்லை. மண்டல அளவிலான கூட்டங்களும் நடத்தப்படவில்லை. தற்போது மாமன்றத்தில் பேச வாய்ப்பு கேட்டால் வாய்ப்ப அளிக்கவில்லை என மூன்று கட்சியினரும் வெளிநடப்பு செய்தனர்.

      இன்றைய மாநகராட்சி கூட்டத்தில் ஆளுங்கட்சியினரும் காரசாரமாக மேயருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன் எதிர்க்கட்சிகளும் வாக்குவாதம் செய்து வெளிநடப்பு செய்ததால் மாமன்றத்தில் பரபரப்பும் பதட்டமும் காணப்பட்டது.

                 பாமக கவுன்சிலர் பாபிகதிரவன் வார்டில் எந்த பணியும் செய்யாததால் அவரே சிசிடிவி கேமராக்களை அமைத்து சாலைகளையும் சொந்த செலவில் செப்பனிட்டு தெரு விளக்குகளையும் இதுவரையில் 15  லட்சம் வரையில் சொந்த செலவில் அமைத்துள்ளார். இதனால் அவரும் வெளிநடப்பு செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 பேட்டி:-1-எழிலரசன் (அதிமுக மாமன்ற எதிர்கட்சி தலைவர்)

பேட்டி:-2- பாபிகதிரவன் (பாமக மாமன்ற உறுப்பினர்)

 

Comments

Popular posts from this blog

• வேலூரில் டெய்ட்கோ ஃபவுண்டேஷன் 4-வது மாநில மாநாடு.

• வேலூர் ஜெய்பீம் இரவு பள்ளி கூட்டமைப்பு "ஐம்பெரும் விழா”.

• பெ.தெ.லீ கல்லூரியில் இயந்திரவியல் துறை கருத்தரங்கம்.