• கோவில் அறங்காவல் குழு உறுப்பினர் நியமன கடிதங்கள் வழங்கல்.

 ·         தமிழக அரசின் அறநிலையத்துறை சார்பில் பல ஆயிரக்கணக்கான கோடி சொத்துக்கள் மீட்கப்பட்டுள்ளது.  

·         கோவில்களின் அறங்காவல் குழு உறுப்பினர்களுக்கு நியமன கடிதங்களை வழங்கி வேலூர் சட்டமன்ற உறுப்பினர் கார்த்திகேயன் பேச்சு.

                 வேலூர், சலவன்பேட்டை ஆனைக்குளத்தம்மன் கோவில் வளாகத்தில் உள்ள சமுதாய கூடத்தில் இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுபாட்டில் உள்ள கோவில்களுக்கு அறங்காவல் குழு உறுப்பினர்கள் நியமன கடிதங்கள் வழங்கும் விழாவானது வேலூர் சட்டமன்ற உறுப்பினர் கார்த்திகேயன் தலைமையில் நடைபெற்றது. இதில் 13 கோவில்களில் 33 பேருக்கு அறங்காவல் குழு உறுப்பினருக்கான நியமன கடிதங்கள் வழங்கப்பட்டது. இவ்விழாவில் அறங்காவல் குழு தலைவர் அசோகன், அறங்காவல் குழு உறுப்பினர் நீதிஅருணாச்சலம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

       இந்த விழாவில் வேலூர் சட்டமன்ற உறுப்பினர் கார்த்திகேயன் பேசுகையில், தமிழக அரசு ஆலயங்களை காக்க பல நடவடிக்கை எடுத்து வருகிறது. ஆலய சொத்துகள் ஆயிரகணக்கான கோடியை தமிழக அரசு மீட்டுள்ளது என பேசினார்.

 

Comments

Popular posts from this blog

• வேலூரில் டெய்ட்கோ ஃபவுண்டேஷன் 4-வது மாநில மாநாடு.

• வேலூர் ஜெய்பீம் இரவு பள்ளி கூட்டமைப்பு "ஐம்பெரும் விழா”.

• பெ.தெ.லீ. பாலிடெக்னிக் கல்லூரியில் “மெக்கத்லான் 2024.