ருத்ராட்சம் அணிவித்தல் - திருக்குடை வைபோக விழா
· திருக்குடை வைபோக விழா நிறுவன தலைவர் பிரத்யங்கராதாசன் வேலுாரில் பேட்டி.
வேலூர் ஆலோசனை கூட்டம், வேலுார் சண்முகடியார் சங்க வளாகத்தில் திருக்குடை சமிதி, சாது சன்னியாசிகள் பாதுகாப்பு சமிதி மற்றும் இந்து பரிவார் சமிதி ஆலோசனை கூட்டம் நிறுவன தலைவர் பிரத்யங்கராதாசன் தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தில், அண்ணாமலையார் திருக்குடை சமிதி பொருளாளர் ரிஷிகேஷ் சுவாமிகள், துணை தலைவர்கள் அசோகன், பூபாலன், மாநில பொதுச்செயலாளர் பாலாஜி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு விருந்தினராக ஆர்எஸ்எஸ் மாநில பெண்கள் அமைப்பு தலைவர் கோமதி நவீன் கலந்து கொண்டு பேசினார்.
இதில், 5-வது ஆண்டாக வேலுாரிலிருந்து அண்ணாமலையாருக்கு திருக்குடை ஊர்வலம் வரும் நவம்பர் 19-ம் தேதி நடத்துவது என கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
இதுதொடர்பாக நிறுவனர் பிரத்யங்கராதாசன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
வேலுாரிலிருந்து இருந்து ஆண்டுதோறும் திருவண்ணாமலையில் உள்ள அண்ணாமலையாருக்கு திருக்குடை ஊர்வலம் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, 5-வது ஆண்டாக வரும் நவம்பர் 19-ஆம் தேதி வேலுார் கோட்டையில் இருந்து திருவண்ணாமலைக்கு 5 திருக்குடையும், கோட்டை ஜலகண்டேஸ்வரர் கோயிலுக்கு ஒரு திருக்குடையும் என மொத்தம் 6 திருக்குடைகளுடன் ஊர்வலம் தொடங்க உள்ளது.
அதற்கு முன்னதாக நவம்பர் 2-ம் தேதி காலை 10 மணிக்கு ஆயிரம் பேருக்கு ருத்ராட்சம் அணிவித்தல், 3-ம் தேதி காலை 7 மணிக்கு 108 சிவலிங்க பூஜையும், மாலை 5 மணிக்கு 108 சக்தி பூஜையும் நடக்கிறது. 4-ம் தேதி காலை 9 முதல் மாலை 4 மணி வரை திருவாசகம் முற்றோதல் நிகழ்ச்சி நடக்கிறது. தொடர்ந்து அன்னதானம் வழங்கப்படும். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்
பேட்டி: பிரத்யங்கராதாசன் (இந்து பரிவார் சமிதி நிறுவனதலைவர்)
Comments
Post a Comment