• தொடக்கப் பள்ளிகளில் காலை உணவுத் திட்டத்தின்கீழ் காலை உணவு வழங்கப்படுவதை மாவட்ட ஆட்சித்தலைவர் பெ.குமாரவேல்பாண்டியன் ஆய்வு.

                 வேலூர் மாவட்டம், அலமேலுமங்காபுரம், வெங்கடாபுரம் பகுதி, காட்பாடி வட்டம் பிரம்மபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, காட்பாடி வட்டம் இல.கவு.புதூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, கே.வி.குப்பம் வட்டம் கீழ்விலாச்சூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி மற்றும் வேலூர் வட்டம் மேல்மொணவூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் மாணவ – மாணவிகளுக்கு காலை உணவு திட்டத்தின் கீழ் காலை உணவு வழங்கப்படுவதை  மாவட்ட ஆட்சித்தலைவர் பெ.குமாரவேல்பாண்டியன் ஆய்வு மேற்கொண்டார்.

                தமிழ்நாட்டில் உள்ள அனைத்து நகர்ப்புறப் பகுதிகள் மற்றும் ஊரகப் பகுதிகளில் உள்ள அனைத்து அரசு தொடக்கப் பள்ளிகளிலும் காலை உணவுத் திட்டம் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களால் 25-8-2023 அன்று  நாகப்பட்டினம் மாவட்டத்தில் தொடக்கி வைக்கப்பட்டது.

                தொடர்ந்து, வேலூர் மாவட்டத்தில் காட்பாடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சேவூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மாண்புமிகு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் காலை உணவு திட்டத்தை தொடங்கி வைத்தார்.

மேலும், வேலூர் மாவட்டத்தில்  காட்பாடி, அணைக்கட்டு, வேலூர், குடியாத்தம், கே.வி.குப்பம் ஆகிய தொகுதிகளில் அந்தந்த தொகுதிகளில் மக்கள் பிரதிநிதிகளாகிய சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், அவரவர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள அரசு தொடக்கப் பள்ளி ஒன்றில் இந்தச் சீர்மிகு திட்டத்தினைத் தொடங்கி வைத்தனர்.

                தமிழ்நாட்டில் உள்ள அனைத்து நகர்ப்புறப் பகுதிகள் மற்றும் ஊரகப் பகுதிகளில் உள்ள அனைத்து அரசு தொடக்கப் பள்ளிகளிலும் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

                அதன்படி, வேலூர் மாவட்டம் அலமேலுமங்காபுரம் புதுவெங்கடாபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் காலை உணவு திட்டத்தின்கீழ் மாணவ, மாணவிகளுக்கு  காலை உணவு வழங்குவதை  மாவட்ட ஆட்சி தலைவர் இன்று  ஆய்வு மேற்கொண்டார்.

                இதனைத் தொடர்ந்து, காட்பாடி வட்டம் பிரம்மபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, காட்பாடி வட்டம் இல.கவு.புதூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மற்றும் கே.வி.குப்பம் வட்டம் கீழ்விலாச்சூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் மாணவ-மாணவிகளுக்கு  காலை உணவு திட்டத்தின் கீழ் காலை உணவு வழங்குவதை  சுவைத்து  பார்த்து மாவட்ட ஆட்சித்தலைவர் பெ.குமாரவேல்பாண்டியன் ஆய்வு செய்தார்.

 

Comments

Popular posts from this blog

• வேலூரில் டெய்ட்கோ ஃபவுண்டேஷன் 4-வது மாநில மாநாடு.

• வேலூர் ஜெய்பீம் இரவு பள்ளி கூட்டமைப்பு "ஐம்பெரும் விழா”.

• பெ.தெ.லீ. பாலிடெக்னிக் கல்லூரியில் “மெக்கத்லான் 2024.