மாவட்ட வள பயற்றுனர்களுக்கு (வேளாண்மை) பண்ணை வாழ்வாதார முயற்சி, உணர்திறன் பயிற்சி
தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தில் அனைத்து மாவட்டத்தில் பணிபுரியும் மாவட்ட வள பயற்றுனர்களுக்கு (வேளாண்மை) பண்ணை வாழ்வாதார முயற்சி உணர்திறன் பயிற்சியை மாவட்ட ஆட்சியர் பெ.குமாரவேல்பாண்டியன் பூமாலை வணிக வளாகம் வெல்மா மண்டபத்தில் துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார்கள்.
. எல்லா மாவட்டத்திலிருந்தும் வந்திருந்த பயிற்றுனர்கள் இந்த பயிற்சிகளின் மூலம் நன்கு தெரிந்துகொண்டு அதனை அவர்கள் மாவட்டதில் உள்ள விவசாயிகளுக்கு பரிந்துரை செய்து அதிக மகசூல் பெற வைக்க வேண்டும். பயிர் காப்பீடு திட்டம் மூலம் இழப்பீடு பெற அணைத்து விவசாயிகளும் காப்பீடு திட்டத்தில் இணைந்து பயன் பெற வேண்டும் என்று கூறினார்கள். சிறந்த விவசாயிகளின் பண்ணைகளுக்கு களப்பயணம் மேற்கொண்டு அந்த விவசாயிகள் கடைபிடிக்கும் நல்ல தொழில் நுட்பங்களை அறிந்து அதனை மற்ற மாவட்டங்களிலும் செயல் படுத்த வேண்டும்.
விவசாயிகள் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் மூலம் தரும் மானியங்களை நல்ல முறையில் பயன்படுத்த வேண்டும் மற்றும் அதனை விவசாயிகளுக்கு எடுத்து கூற வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் பெ.குமாரவேல்பாண்டியன் அறிவுறுத்தினார்.
இந்நிகழ்ச்சியில் மகளிர் திட்ட இயக்குநர் உ. நாகராஜன், சென்னை திட்ட மேலாளர் செந்தில்குமார், மூத்த வேளாண் ஆலோசகர் ரகுராமன் மற்றும் வேளாண்மை உதவி இயக்குநர் ஸ்டீபன்ஜெயகுமார், மாவட்ட வளபயிற்றுனர் அலுவலர் சம்பத், உதவி திட்ட அலுவலர் (வாழ்வாதாரம்) தனலட்சுமி, உதவி திட்ட அலுவலர் (நகர்புறம்) எஸ். சுபாஷ்சந்திரன், DSMS மேலாளர் சந்திரசேகர் மற்றும் வட்டார மேலாண்மை இயக்க மேலாளர் வனிதா மற்றும் களப்பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
Comments
Post a Comment