• வேலூரில் பாஜக-வினர் ஆர்பாட்டம்


·         வேலூரில் மாநகராட்சியின் நிர்வாக சீர்கேடுகளை கண்டித்தும் - டெங்கு பரவலை தடுக்க தவறிய மாவட்ட நிர்வாகத்தை கண்டித்தும் பாஜக-வினர் ஆர்பாட்டம்.

                 வேலூர் அண்ணா கலையரங்கம் அருகில் பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் மாவட்ட தலைவர் மனோகரன் தலைமையில் ஆர்பாட்டம் நடைபெற்றது. இதில் வேலூர் மாநகராட்சியில் ஆங்காங்கே குப்பையாக காட்சியளிக்கிறது. சாலைகள் சரியில்லை. கழிவு நீர் கால்வாய்களும் சரிவர பராமரிப்பதில்லை. இதனால் பல்வேறு நோய்கள் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

      எனவே மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்தும் டெங்கு வேகமாக பரவி வருவதை கட்டுபடுத்த தவறிய மாவட்ட நிர்வாகத்தை கண்டித்தும், திரளான பாஜக-வினர் ஆர்பாட்டத்தில் பங்கேற்று கோஷங்களை எழுப்பினார்கள்.

      இதில் மாவட்ட பொதுசெயலாளர் பாபு, வணிகர் பிரிவு மாநில துணை தலைவர் இளங்கோ, மாவட்ட துணை செயலாளர் ஜெகன், வெங்கடேசன் உள்ளிட்ட திரளான பாஜக-வினர் கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்பாட்டம் செய்தனர்.

 

Comments

Popular posts from this blog

• வேலூரில் டெய்ட்கோ ஃபவுண்டேஷன் 4-வது மாநில மாநாடு.

• பெ.தெ.லீ கல்லூரியில் இயந்திரவியல் துறை கருத்தரங்கம்.

• P.T. Lee கல்லூரி முதலாம் ஆண்டு மாணவர்கள் வரவேற்பு விழா.