• பௌர்ணமி முன்னிட்டு தங்க தேரை இழுத்து மக்கள் வழிபாடு
· ஸ்ரீ நடராஜருக்கு பால், தயிர், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் – மகாதீபாராதனை - திரளான பக்தர்கள் சாமி தரிசனம்
· பௌர்ணமி முன்னிட்டு தங்க தேரை இழுத்து மக்கள் வழிபாடு.
வேலூர் கோட்டையிலுள்ள ஸ்ரீஜலகண்டீஸ்வரர் ஆலயத்தில் புரட்டாசி சுக்கிலபட்ச சதுர்த்தசி முன்னிட்டு சிறப்பு யாகம் நடத்தி ஸ்ரீ நடராஜருக்கு பால், தயிர், சந்தனம், உள்ளிட்ட பல்வேறு பொருட்களை கொண்டு ஸ்ரீ நடராஜர் சிவகாமசுந்தரி அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகங்களை செய்து வில்வ இலை மாலைகள் மலர் மாலைகளால் சிறப்பு அலங்காரங்களை செய்து மகாதீபாராதனைகள் நடைபெற்றது.
இதில் கலவை சச்சிதானந்த சுவாமிகள் ஆலய செயலாளர் சுரேஷ் உள்ளிட்ட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு முழக்கங்களை எழுப்பி சாமி தரிசனம் செய்தனர்.
இதனிடையே பௌர்ணமியை முன்னிட்டு ஸ்ரீ ஜலகண்டீஸ்வரர் அகிலாண்டீஸ்வரி அம்மன் அலங்காரங்களை செய்து தங்க ரதத்தில் வைத்து தங்க தேரினை பக்தர்கள் திரளானோர் வடம் பிடித்து இழுத்து சாமி தரிசனம் செய்தனர்.
Comments
Post a Comment