• இந்திரா தொடக்கப் பள்ளி நிர்வாகி - அமைச்சர் பாராட்டி வாழ்த்து.

·         காவனூரில் அரசு ஆரம்ப சுகாதாரம் நிலையம் அமைக்க ரூ.ஒரு லட்சம் நிதி கொடுத்த இந்திரா தொடக்கப் பள்ளி நிர்வாகி ஆர் சேட்டு- அமைச்சர் பாராட்டி வாழ்த்து.

     ராணிப்பேட்டை மாவட்டம், காவனூரில் ஆரம்ப சுகாதாரம் நிலையம் அமைக்க இடம் வாங்குவதற்காக நிதி திரட்டியபோது காவனூர் இந்திரா நர்சரி மற்றும் தொடக்கப்பள்ளி நிர்வாகி ஆர்.சேட்டுலட்சுமி முதல் முதலில் ரூ.1,05,000/- (ஒரு லட்சத்து ஐந்தாயிரம்) கொடுத்து இடம் வாங்க தொடங்கி வைத்தார்.

     அதன் விளைவாக மிக விரைவாக கிடு கிடு என நிதி சேர்ந்து காவனூர் திமிரி ரோட்டில் உள்ள திப்பைமலை அருகில் ஒரு ஏக்கர் நிலம் சுமார் ரூ.21 லட்சத்து 95 ஆயிரம் பதிவு கட்டணம் சேர்த்து ரூ.25 லட்சம் நிலம் வாங்கி பூமி பூஜை போடப்பட்டது. தொடர்ந்து பலர் நன்கொடை அளித்தனர்

     அது சமயம் முதன் முதலில் நிதி கொடுத்த காவனூர் இந்திரா நர்சரி மற்றும் தொடக்கப் பள்ளியின் நிர்வாகி ஆர் சேட்டு அவர்களுக்கு தமிழக கைத்தறி அமைச்சர் மாண்புமிகு ஆர்.காந்தி, ஆற்காடு சட்டமன்ற உறுப்பினர் ஜே.எல்.ஈஸ்வரப்பன், ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சி தலைவர் .வளர்மதி, முன்னிலையில் பாராட்டி இந்திரா பள்ளி நிர்வாகி ஆர்.சேட்டு-க்கு சால்வை அணிவித்து கேடயம் வழங்கி பாராட்டினர்.

 

Comments

Popular posts from this blog

• வேலூரில் டெய்ட்கோ ஃபவுண்டேஷன் 4-வது மாநில மாநாடு.

• பெ.தெ.லீ கல்லூரியில் இயந்திரவியல் துறை கருத்தரங்கம்.

• P.T. Lee கல்லூரி முதலாம் ஆண்டு மாணவர்கள் வரவேற்பு விழா.