• கோட்டை நோக்கி பேரணியில் பங்கேற்க வேலூர் மாவட்ட ஆரம்பப்பள்ளி ஆசிரியர்கள் பயணம்.

      பழைய ஓய்வூதிய திட்டதை நடைமுறைப்படுத்த வேண்டும், பறிக்கப்பட்ட மத்திய அரசின் ஆசிரியர்களுக்கு இணையான ஊதியத்தை மீண்டும் அனைத்து இடைநிலை ஆசிரியர்களுக்கு வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட 30 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றிட கோரி தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் சார்பில் சென்னை மாநகரில் பல்லாயிரக்கணக்கான ஆசிரியர்களின் கோரிக்கைகளின் மீது தமிழ்நாடு அரசின் பாராமுகத்தை உடைத்தெறியும் பேரணியான "கோட்டை நோக்கிப் பேரணி"யில் பங்கேற்க வேலூர் மாவட்ட ஆரம்ப பள்ளி ஆசிரியர்கள் 500 பேர் வேலூரில் இருந்து புறப்பட்டனர்.

              இந்த நிகழ்வில் மாவட்ட தலைவர் எம்.பி.சுரேஷ்குமார், செயலாளர் .சீனிவாசன், பொருளாளர் விஜயலட்சுமி, மாநில செயற்குழு உறுப்பினர் .ஜோசப்அன்னையா, கல்வி மாவட்ட செயலாளர் காசி, துணைத்தலைவர் வெங்கட்ராமன் ஆகியோர் தலைமையில் வேலூர், கணியம்பாடி, அணைக்கட்டு, பேர்ணாம்பட்டு, குடியாத்தம், கே.வி.குப்பம், காட்பாடி ஆகிய பகுதியிலிருந்து 6 பேருந்துகள், மற்றும் வேன் மூலம் புறப்பட்டனர்.

      இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் அகில இந்திய செயற்குழு உறுப்பினர் செ.நா.ஜனார்த்தனன் வாழ்த்தி வழியனுப்பி வைத்தார்.

 

Comments

Popular posts from this blog

• பெ.தெ.லீ. பாலிடெக்னிக் கல்லூரியில் “மெக்கத்லான் 2024.

• வேலூர் ஜெய்பீம் இரவு பள்ளி கூட்டமைப்பு "ஐம்பெரும் விழா”.