• P.T.லீ கல்லூரியில் மின்னியல் மற்றும் மின்னணு துறை கூட்டமைப்பு துவக்க விழா

 

·         P.T.லீ செங்கல்வராய நாயக்கர் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியில் மின்னியல் மற்றும் மின்னணு துறை கூட்டமைப்பு துவக்க விழா!

·         மின்னியல் மற்றும் மின்னணு துறை தகவல்கள் குறுந்தகட்டை இயக்குனர் டாக்டர் அருளரசு வெளியிட்டார்.

      காஞ்சிபுரம் மாவட்டத்தில், ஊவேரியில்,  பி.டி.லீ. செங்கல்வராய நாயக்கர் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரி செயல்படுகிறது. இக்கல்லூரி, P.T. லீ செங்கல்வராய நாயக்கர் அறக்கட்டளையின் தலைவரும், சென்னை உயர் நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதியுமான, நீதியரசர் பொன். கலையரசன் மற்றும் அறங்காவலர்கள் குழுவின் வழிகாட்டுதலுடன், இக்கல்லூரியில மின்னியல் மற்றும் மின்னணு துறை கூட்டமைப்பு (Electrical Engineering Association) துவக்க விழா வெகு விமர்சியாக நடைபெற்றது.

      இந்நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர், மின்னியல் மற்றும் மின்னணு துறை தலைவர் Dr.S.பிரபாகரன் அனைவரையும் வரவேற்று பேசினார். கல்லூரி முதல்வர் Dr.P. பழனிசாமி வாழ்த்துரை வழங்கினார்.

      திறன்களை மேம்படுத்தி பொது தேர்வுகளில் மாணவர்கள் பங்கேற்க பேராசிரியர் டாக்டர் உதயகுமார் வலியுறுத்தல்,

      இதனை தொடர்ந்து, சிறப்புரை ஆற்றிய கல்லூரியின் இயக்குனரும், தொழில்நுட்ப கல்விக் கழகத்தின் மேனாள் இணை இயக்குனருமான, Dr.M.அருளரசு  சிறப்பு விருந்தினரை சால்வை அணிவித்து வரவேற்று நினைவு பரிசினை வழங்கினார்.

     நாட்டின் உட்கட்டமைப்பு மற்றும் தொழில்துறை மேம்பாட்டிற்கு மின்னியல் துறையின் தேவையும் அதன் முன்னேற்றத்தையும் குறிப்பிட்டு மாணவர்களுக்கு எடுத்துரைத்தார்.

        சிறப்புரையின் இறுதியாக, மின்னியல் மற்றும் மின்னணு துறை தொடர்பான அடிப்படை தகவல்கள் அடங்கிய தொகுப்பை குறுந்தகடாக இயக்குனர் வெளியிட சிறப்பு விருந்தினர் சென்னை அண்ணா பல்கலைக்கழக  மின்னியல் மற்றும் மின்னணு துறை பேராசிரியர் Dr.K.உதயகுமார பெற்றுக் கொண்டார்.

         இதனைத் தொடர்ந்து, கல்லூரியின் பேராசிரியர் Dr. K. வெங்கடேசன் சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்து வைத்தார்.

 தலைமை உரையாற்றிய அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர் Dr.K. உதயகுமார் கல்லூரி  பாடத்திட்டத்துடன் இது போன்ற துறை ரீதியான அமைப்புகளின் மூலம் கூடுதல் திறன்களை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினார். மாநில மற்றும் தேசிய அளவிலான போட்டித் தேர்வுகளில் பங்கெடுத்து சாதிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.  மேலும் இன்றைய காலகட்டத்தில் போட்டிகள் நிறைந்திருப்பதால் தற்கால சூழ்நிலைகளை எதிர் கொள்ளும் வகையில் மாணவர்கள் தங்களை தகுதிப்படுத்திக் கொள்ள வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

   துறை பேராசிரியர், திருமதி K. பூங்கொடி  நன்றி உரையாற்றினார்.

   இந்நிகழ்வில் அனைத்து துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள் மற்றும் திரளான மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டனர்.

 

Comments

Popular posts from this blog

• வேலூரில் டெய்ட்கோ ஃபவுண்டேஷன் 4-வது மாநில மாநாடு.

• வேலூர் ஜெய்பீம் இரவு பள்ளி கூட்டமைப்பு "ஐம்பெரும் விழா”.

• பெ.தெ.லீ. பாலிடெக்னிக் கல்லூரியில் “மெக்கத்லான் 2024.