• P.T.Lee பொறியியல் கல்லூரி - கணிணி அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறை கூட்டமைப்பு துவக்க விழா.
· P.T.Lee செங்கல்வராய நாயக்கர் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியில் கணிணி அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறை கூட்டமைப்பு துவக்க விழா!
· கணிணி அறிவியல், தொழில்நுட்ப வளர்ச்சி, புதிய வகையான மென்பொருள்-இயக்குனர் சத்தியநாராயன்முருகன் விளக்கம்.
காஞ்சிபுரம் மாவட்டம், ஊவேரியில், பி.டி.லீ. செங்கல்வராய நாயக்கர் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரி செயல்படுகிறது. இக்கல்லூரி, P.T.Lee செங்கல்வராய நாயக்கர் அறக்கட்டளையின் தலைவரும், சென்னை உயர் நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதியுமான, நீதியரசர் பொன். கலையரசன் மற்றும் அறங்காவலர்கள் குழுவின் வழிகாட்டுதலுடன் மற்றும் கல்லூரியின் இயக்குனரும், தொழில்நுட்ப கல்விக் கழகத்தின் மேனாள் இணை இயக்குனருமான, Dr.M.அருளரசு அவர்களின் வழிநடத்துதலுடன் கணிணி அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறை கூட்டமைப்பு (Computer Science and Information Technology Association) துவக்க விழா இன்று (30.09.2023) வெகு விமரிசையாக நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர், கணிணி அறிவியல் துறை தலைவர் Dr.A.K.ஞானசேகர் அனைவரையும் வரவேற்று பேசினார். கல்லூரி முதல்வர் Dr.P.பழனிசாமி வாழ்த்துரை வழங்கினார்.
இதனை தொடர்ந்து, கல்லூரி முதல்வரும் மற்றும் கணிணி அறிவியல் துறை தலைவரும் சிறப்பு விருந்தினரை சால்வை அணிவித்து வரவேற்று நினைவு பரிசினை வழங்கினார்.
இக்காலகட்டத்தில் கணிணி அறிவியலும், தொழில்நுட்ப வளர்ச்சி பற்றியும், புதிய வகையான மென்பொருள்கள் பற்றியும் சத்தியநாராயன்முருகன், Director (Delivery), Prodapt Solutions Pvt. Ltd, Chennai, எடுத்துரைத்தார்.
துணை பேராசிரியர் E. கமலநாதன் HOD/IT நன்றி உரையாற்றினார்.
இந்நிகழ்வில் அனைத்து துறை தலைவர்கள், பேராசிரியர்கள் மற்றும் திரளான மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
Comments
Post a Comment