• ரங்காபுரம் பகுதியில் ஏசிஎஸ் மருத்துவ கல்லூரி மருத்துவமனை சார்பில் இலவச மருத்துவ முகாம்.

 ·         வேலூர் மாநகரில், ரங்காபுரம் பகுதியில் ஏசிஎஸ் மருத்துவ கல்லூரி மருத்துவமனை சார்பில் இலவச மருத்துவ முகாம்.

 ·         புதிய நீதிக்கட்சிதலைவர் ஏசி சண்முகம் பிறந்த நாள் முன்னிட்டு ஏசிஎஸ் மருத்துவ கல்லூரி மருத்துவமனை சார்பில் தொடர்ந்து இலவச மருத்துவ முகாம்கள் - பல ஆயிரக்கணக்கானோர் பயனடைந்தனர்.

           மருத்துவர்களை தேடி மக்களல்ல மக்களை தேடி மருத்துவர்கள்”  புதிய நீதிக்கட்சி தலைவருமான .சி.எஸ் மருத்துவ கல்லூரி மருத்துவமனை நிறுவனர் .சி.சண்முகம் தொடங்கி வைத்தார்

               வேலூர் மாநகரில், ரங்காபுரம் பகுதியில் ஏசிஎஸ் மருத்துவ கல்லூரி மருத்துவமனை சார்பில் பாரத பிரதமர் நரேந்திரமோடியின் பிறந்த நாள் மற்றும் புதிய நீதிக்கட்சி தலைவர் .சி.சண்முகம் பிறந்த நாளை முன்னிட்டு பொதுமக்களுக்கு இலவச உடற்பரிசோதனை மற்றும் மருத்துவ முகாமானது நடைபெற்றது. இதனை புதிய நீதிக்கட்சி தலைவர் .சி.எஸ் மருத்துவ கல்லூரி மருத்துவமனை நிறுவனருமான .சி.சண்முகம் துவங்கி வைத்தார். கண் பரிசோதனை செய்யப்பட்டவர்களுக்கு கண்ணாடிகளை வழங்கினார்.

      இதில் எலும்பு சிகிச்சை நிபுணர்கள், நீரிழிவு நோய்க்கான சிறப்பு மருத்துவர்கள் உள்ளிட்டோரும் கலந்து கொண்டு பொதுமக்களை பரிசோதனை செய்து அவர்களுக்கு உரிய மருந்து மாத்திரைகளை விலையில்லாமல் வழங்கினார். மேலும் இதில் நீரிழிவு நோய், இரத்த அழுத்தம் உள்ளிட்டவைகளும் இலவசமாக பரிசோதனை செய்யப்பட்டு மருத்துவர்கள் நோயாளிகளுக்கு பல்வேறு அறிவுரைகளை வழங்கி மருந்து மாத்திரைகளை வழங்கினார்கள்.

             இதேபோன்று குடியாத்தத்தில் நடந்த சங்க விழாவிலும் .சி.சண்முகம் பங்கேற்று மாணவ, மாணவிகள் கல்வி உபகரணங்கள் மற்றும் நலத்திட்டங்களை வழங்கினார்.

 

Comments