• எஸ்.ஆர்.எம். - கல்விப் புலங்களில் கவனம்பெற “தமிழில் சிறார் இலக்கியங்கள்”

 ·         எஸ்.ஆர்.எம். - கல்விப் புலங்களில் கவனம்பெறதமிழில் சிறார் இலக்கியங்கள்

·         ஆறு நாள் இணைய வழி ஆசிரியர் திறன் மேம்பாட்டுப் பயிலரங்கம்.

·         நூற்றுக்கும் மேற்பட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து பங்கேற்றது தனிச்சிறப்பு.

      காட்டாங்குளத்தூர், எஸ்.ஆர்.எம். அறிவியல் மற்றும் கலையியல் புலத் தமிழ்த்துறைதமிழில் சிறார் இலக்கியங்கள்என்னும் தலைப்பில் ஆறு நாள் இணைய வழியிலான ஆசிரியர் திறன் மேம்பாட்டுப் பயிலரங்கத்தினை ஒருங்கிணைத்து வருகின்றது.

              2023 அக்டோபர் 16-ஆம் தேதி தொடங்கிய இப்பயிலரங்கம் 21 ஆம் தேதி நிறைவு பெற்றது. பெரிதும் கல்விப்புலங்களில் கவனப்படுத்தப்படாத சிறார் இலக்கியங்கள் குறித்து ஆறு நாட்கள் தொடர் நிகழ்வை நடத்தி எஸ்.ஆர்.எம். தமிழ்த்துறை இத்துறை சார்ந்த சிந்தனையைப் பரவலாக்கம் செய்துள்ளது. 

      இந்த ஆறுநாள் பயிலரங்கில் 12 பேர் உரை வழங்கிச் சிறப்பிக்கின்றார்கள். சாகித்திய அகாதமியின் பாலபுரஸ்கார் விருதுபெற்ற பல எழுத்தாளர்களும், எஸ்.ஆர்.எம். தமிழ்ப்பேராய அழ.வள்ளியப்பா, குழந்தை இலக்கிய விருதுபெற்ற பல எழுத்தாளர்களும், தமிழ்நாடு பாடநூல் நிறுவனம் வழி சிறுவர் நூல்களை வெளியிட்ட எழுத்தாளர்களும்,  இப்பயிலரங்கில் உரை வழங்கி வருவது கூடுதல் சிறப்பு.

                 சென்னை முதல் கன்னியாகுமரி வரை நூற்றுக்கும் மேற்பட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து இருநூற்றுக்கும் மேற்பட்டோர் இப்பயிலரங்கில் பங்கேற்பாளர்களாக கலந்து கொண்டது இந்நிகழ்வின் தனிச்சிறப்பு.

                இணைய வழியில் நடைபெறுவதன் மூலமே இத்தனை பேர் வெவ்வேறு ஊர்களில் இருந்தும் நிறுவனங்களில் இருந்தும் கலந்துகொள்ள முடிந்தது என எஸ்.ஆர்.எம். தமிழ்த்துறையின் தலைவர் முனைவர் பா. ஜெய்கணேஷ் கூறியிருக்கிறார்.

                இந்த நிகழ்வு கல்விப்புலங்களில் தமிழில் சிறார் இலக்கியங்கள் குறித்த அடுத்த கட்ட முன்னகர்வுக்கும் வழிவகை செய்யும் எனவும் தெரிவித்திருத்தார்.

 

Comments

Popular posts from this blog

• பெ.தெ.லீ. பாலிடெக்னிக் கல்லூரியில் “மெக்கத்லான் 2024.

• வேலூர் ஜெய்பீம் இரவு பள்ளி கூட்டமைப்பு "ஐம்பெரும் விழா”.