வேலூர் வரலாற்று சுவடுகள் என்ற தலைப்பில் கதைகள் திறன் மேம்பாட்டு நிகழ்ச்சி.

·        நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வேலூர் வரலாற்று சுவடுகள் என்ற தலைப்பில் கதைகளை சொல்லி வரலாற்று நிகழ்வுகளை எடுத்துரைக்கும்  திறன் மேம்பாட்டு  நிகழ்ச்சி

                நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வேலூர் முத்துரங்கம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வேலூர் வரலாற்று சுவடுகள் என்ற தலைப்பில் கதைகளை சொல்லி வரலாற்று நிகழ்வுகளை எடுத்துரைக்கும்  திறன் மேம்பாட்டு நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சித் தலைவர் பெ.குமாரவேல்பாண்டியன் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.

                தமிழ்நாட்டு மாணவர் ஒருவர் உலகின் எந்த நாட்டு மாணவரைவிட தரமும், தகுதியும் குறைந்தவர் கிடையாது என்பதை எடுத்துரைக்கும் வகையில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் நான் முதல்வன் திட்டத்தை தொடங்கினார்கள். குறிப்பாக 9 முதல் 12-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கான உயர்கல்வி படிப்புகள், அவை தொடர்பான வேலைவாய்ப்பு பற்றிய தகவல்கள் நான் முதல்வன் திட்டத்தின் மூலம் வழங்கப்படுகிறது. மேலும் வேலை வாய்ப்புகள் தொடர்பாக பல்வேறு திறன் மேம்பாட்டு திட்டங்களும் செயல்படுத்தப்படுகிறது.

                ஒவ்வொரு மாணவருக்கும் உள்ள திறன்களை வெளிக்கொண்டு வந்து அவர்களுக்கு தகுந்த வேலைவாய்ப்பினை உருவாக்கி வாழ்வில் வழிகாட்டுவதே இந் திட்டத்தின் நோக்கமாகும். அந்த வகையில் தமிழ்நாடு அரசின் சார்பில் மாநிலத்தில் உள்ள அனைத்து கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் கதை சொல்லுதல் பாடப்பிரிவு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

                நான் முதல்வன் திட்டத்தின்கீழ் ஒவ்வொரு கல்லூரியிலும் மாணவர்களுக்கு கதைகளின் வழியே அவர்களுடைய திறனை வெளிக்கொண்டு வந்து வரலாற்று நிகழ்வுகளை தெரிந்து கொள்ளும் திறன் மேம்பாட்டு நிகழ்ச்சி  நடத்தப்பட்டு வருகிறது.

                வேலூர் முத்துரங்கம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணாக்கர்களுக்கு கதை சொல்லுதல் மூலமாக வரலாற்று நிகழ்வுகளை அறிந்து கொள்ளும் 45 மணி நேர பயிற்சி வழங்கப்பட்டது. இப்பயிற்சியில் பங்கு பெற்ற மாணவர்கள் தாங்கள் கற்றுக் கொண்ட,  தங்களுடைய திறன்களை வெளிப்படுத்தும் விதமாக இன்று வரலாற்று நிகழ்வுகள் அடங்கிய கண்காட்சியினை ஏற்படுத்தி அதன் மூலம் கதைகளை சொல்லி வரலாற்று நிகழ்வுகளை எடுத்துரைத்தனர்.

                இக்கண்காட்சியினை தொடங்கி வைத்த மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களிடம் கதை சொல்லுதல் மூலம்  வீரமங்கை வேலு நாச்சியார், சிந்து சமவெளி நாகரிகம், மௌரிய பேரரசு, சேர சோழ பாண்டிய மற்றும் பல்லவ பேரரசு களின் வரலாற்று நிகழ்வு குறித்து மாணவ மாணவிகள் எடுத்துரைத்தனர்.

                பின்னர் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.பெ.குமாரவேல் பாண்டியன், இ.ஆ.ப.,  அவர்கள்.இந்த கண்காட்சிகளை அமைத்து நமது நாடு மற்றும் மாநிலத்தின் பண்டைய வரலாற்று நிகழ்வுகளை கண் முன்னே கொண்டு வந்து அது குறித்த தகவல்களை விரிவாக கதைகளாக விவரித்த அனைத்து மாணவர்களுக்கும் தன்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்தார்.

                 இந்நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் முனைவர் ஏ.மலர்,  மாவட்ட திறன் மேம்பாட்டு அலுவலக உதவி இயக்குநர் காயத்ரி,  நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் முனைவர் நீனாகாயத்ரி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

 

Comments

Popular posts from this blog

• வேலூரில் டெய்ட்கோ ஃபவுண்டேஷன் 4-வது மாநில மாநாடு.

• வேலூர் ஜெய்பீம் இரவு பள்ளி கூட்டமைப்பு "ஐம்பெரும் விழா”.

• பெ.தெ.லீ. பாலிடெக்னிக் கல்லூரியில் “மெக்கத்லான் 2024.