“நடப்போம் நலம் பெறுவோம் திட்டம்”

  • மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையின் சார்பில் நடப்போம் நலம் பெறுவோம் திட்டத்தினை வருகின்ற 04. 11. 2023 சனிக்கிழமை அன்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தொடங்கி வைக்க உள்ளதை தொடர்ந்து, வேலூர் மாவட்டத்தில் “நடப்போம் நலம் பெறுவோம் திட்டம்” கோட்டை அருகே உள்ள காந்தி சிலை அருகில் இருந்து மாவட்ட ஆட்சித் தலைவர்  தொடங்கி வைக்க உள்ளார்.

                பொதுமக்கள் சுகாதாரமான வாழ்க்கையை வாழ்வதற்காக தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது அதன் அடிப்படையில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் சட்டப்பேரவையில் அறிவித்தவாறு அரசாணை 105 “நடப்போம் நலம் பெறுவோம்" எனும் திட்டம் நிறைவேற ஆணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் நடப்போம் நலம் பெறுவோம்" திட்டத்தின்படி 8 கிலோமீட்டர் தூரத்திற்கு நடைபயிற்சி இருக்கும் வகையில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் வருகின்ற  04:11 2023 அன்று துவக்கி வைக்க உள்ளர்கள்

            நமது வேலூர் மாவட்டத்திலும் இத்திட்டம் சிறப்பாக செயல்படுத்த மாவட்ட நிர்வாகம் முன்னேற்பாடுகளை செய்து வருகிறது.

            "நடப்போம் நலம் பெறுவோம் என்பதன் அடிப்படை நோக்கம் என்னவெனில் பொதுமக்கள் ஒவ்வொருவரும் தினமும் 8 கிலோமீட்டர் தூரம் அல்லது 10,000 அடி தூரம் நடக்கவேண்டும். அவ்வாறு நடக்கும்போது தொற்றா நோய்களான உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு நோய் போன்ற நோய்கள் வருவதற்கான வாய்ப்புகள் குறைவதுடன் உடலுக்கு புத்துணர்ச்சி கிடைக்கிறது.

            வேலூர் மாவட்டத்தில் நடப்போம் நலம் பெறுவோம் திட்டத்தினை செயல்படுத்திடும் பொருட்டு அதற்கான இடத்தினை  மாவட்ட ஆட்சித் தலைவர் பெ.குமாரவேல்பாண்டியன், துணைஇயக்குநர் சுகாதாரப்பணிகள் பானுமதி ஆகியோர் வேலூரை கற்றியுள்ள பல்வேறு பகுதிகளையும் ஆய்வு செய்தனர்.

                இறுதியில் வேலூர் மாநகராட்சி பகுதியில் கோட்டைக்கு முன்புறம் உள்ள காந்தி சிலையின் அருகிலிருந்து நடைபயிற்சி துவங்கப்பட உள்ளது. இதில், வேலூர் மாவட்ட ஆட்சியர், வேலூர் பாராளுமன்ற உறுப்பினர், சட்டமன்ற உறுப்பினர்கள், மாநகராட்சி மேயர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு உள்ளாட்சிமன்ற பிரதிநிதிகள், துணைஇயக்குநர் சுகாதாரப்பணிகள் உள்ளிட்ட மாவட்டத்தில் பல்வேறு உயர் அதிகாரிகளும், நடைபயிற்சி மேற்கொள்வோர் சங்கத்தினர், பொதுமக்கள் என பெரும் திரளானோர் "நடப்போம் நலம் பெறுவோம்’’ நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளனர்.

            காந்திசிலை அருகில் துவங்கும் நடைபயிற்சியாது கோட்டைக்கு வெளியில் ஆரம்பித்து முனீஸ்வரன் கோவில் பெரியார் பூங்காவின் வெளிப்புற நடைபாதை வழியாக கோட்டைக்குள் வந்து மைதானம், காவலர் பயிற்சிபள்ளி. ஜகண்டீஸ்வரர் கோவில் வழியாக மீண்டும் காந்தி சிலை வழியே வரும் போது 4 கிலோமீட்டர் தூரம் நிறைவு செய்யும் அங்கிருந்து மீண்டும் நடைபயிற்சி அதே வழியில் பயணித்து இரண்டாவது கற்றினை நிறைவு செய்யும்போது 8 கிலோமீட்டர் தூரம் முடிவடையும்.

            நடைபயிற்சியின்போது நடைபயிற்சி மேற்கொள்பவர்கள் களைப்படையாமல் இருக்க ஓய்வு இருக்கைகள், நீர்சத்து குறையாமல் இருக்கும் வகைளில் கடலை மிட்டாய், தண்ணீர் அருந்தும் இடங்கள், மருத்துவ முகாம், 108 அவசர ஊர்தி என பல்வேறு ஏற்பாடுகள் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் மேற்கொள்ளப்படும் என  மாவட்ட ஆட்சித் தலைவர் பெ.குமாரவேல்பாண்டியன் தெரிவித்துள்ளார்.

 

Comments

Popular posts from this blog

• பெ.தெ.லீ. பாலிடெக்னிக் கல்லூரியில் “மெக்கத்லான் 2024.

• வேலூர் ஜெய்பீம் இரவு பள்ளி கூட்டமைப்பு "ஐம்பெரும் விழா”.