• இராணிப்பேட்டை மாவட்ட காவல் அலுவலகத்தில் "தேசிய ஒற்றுமை நாள்" உறுதிமொழி ஏற்பு.

     இராணிப்பேட்டை மாவட்ட காவல் அலுவலகத்தில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் விஸ்வேஸ்வரய்யா (தலைமையிடம்) மற்றும் குமார் (இணையவழி குற்றப்பிரிவு) ஆகியோர் தலைமையில், "தேசிய ஒற்றுமை நாள்" உறுதிமொழி ஏற்கப்பட்டது.

   இவ்வுறுதிமொழியில், "இந்திய நாட்டின் ஒற்றுமையையும் ஒருமைப்பாட்டையும் பேணுவதற்கு என்னையே உவந்தளிப்பேன் என்றும், இந்த நல்லியல்புகளை எனது நாட்டு மக்களிடையே பரப்புவதற்கு அயராது பாடுபடுவேன் என்றும் உளமாற உறுதியளிக்கிறேன்.

      சர்தார் வல்லபாய் பட்டேலின் தொலைநோக்கு பார்வையாலும் நடவடிக்கைகளாலும் சாத்தியமாக்கப்பட்ட ஒன்றிணைந்த தேசத்தின் நல்லுணர்வினைப் பேண நான் இந்த உறுதிமொழியை ஏற்கிறேன்.

     எனது நாட்டின் உள்பாதுகாப்பினை உறுதி செய்ய எனது பங்களிப்பினை நல்குவேன் என்றும் உளமாற உறுதியளிக்கிறேன்" எனஉறுதிமொழி எடுத்துக் கொள்ளப்பட்டது.

                இவ்வுறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சியில் காவல் ஆளிநர்கள் மற்றும் அமைச்சு பணியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

     மேலும் இராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் "தேசிய ஒற்றுமை நாள்" உறுதிமொழி ஏற்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

 

Comments

Popular posts from this blog

• பெ.தெ.லீ. பாலிடெக்னிக் கல்லூரியில் “மெக்கத்லான் 2024.

• வேலூர் ஜெய்பீம் இரவு பள்ளி கூட்டமைப்பு "ஐம்பெரும் விழா”.