• எஸ்.ஆர்.எம். வள்ளலாரின் 200-வது பிறந்த நாளை முன்னிட்டு பன்னாட்டு கருத்தரங்கம்
· எஸ்.ஆர்.எம். அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியில் தமிழ் பேராயம் நடத்தும் வள்ளலாரின் 200-வது பிறந்த நாளை முன்னிட்டு பன்னாட்டு கருத்தரங்கம்.
செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்கொளத்தூரில் உள்ள எஸ்.ஆர்.எம் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரி சார்பில் தமிழ் பேராயம் நடத்தும் வள்ளலாரின் 200-வது பிறந்த நாளை முன்னிட்டு வள்ளலார் உணர்த்தும் வாழ்வியல் நெறிகள் என்ற தலைப்பிலான பன்னாட்டு கருத்தரங்கம் தமிழ் பேராயத்தின் சார்பில் நடைபெற்றது.
இந்த கருத்தரங்கம் எஸ்.ஆர்.எம் அறிவியல் மற்றும் கலையியல் கல்லூரி புலத்தலைவர் ஆ.துரைசாமி தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகத்தின் நிறுவன தலைவரும், பெரம்பலூர் நாடாளுமன்ற உறுப்பினருமான முனைவர் டாக்டர் பாரிவேந்தர் கலந்து கொண்டு, அமுதசுரபி நாளிதழின் ஆசிரியர் முனைவர் திருப்பூர் கிருஷ்ணன் இயற்றிய அமுதசுரபி மாத இதழின் முதல் பதிப்பை வெளியிட்டார்.
இதனை தொடர்ந்து நிகழ்ச்சியில் டாக்டர் பாரிவேந்தர் கூறுகையில்:
எந்த பல்கலைகழகமும், கல்லூரியும், தமிழுக்காக ஒரு துறையை உருவாக்கி அதில் உட்பிரிவு தமிழ்ப்பேராயம் தொடங்கி நடத்தவில்லை என தெரிவித்தார். தமிழ் மீது கொண்டு உள்ள ஆர்வத்தால் இந்த கல்லூரியில் தமிழ்ப்பேராயம் பல ஆண்டுகளாக நடத்தப்பட்டு வருகிறது. அதில் தமிழ் மீது ஆர்வம் உள்ள நபர்களை அழைத்து வந்து பரிசுகளும் வழங்கப்படுகிறது. ஆண்டுதோறும் நடத்தப்படும் தமிழ்ப்பேராயம் ஐந்தாம் தமிழ் சங்கம் போன்றதாக தெரிவித்தார்.
மக்களுக்கு சேவை செய்வது, அன்பு செலுத்துவதும் மட்டுமே ஆன்மீகம். ஆனால் மக்களுக்கான ஆன்மீகத்தை மாறுபட்ட சமூக நீதியாக மாற்றியுள்ளார் வள்ளலார் என்பதனை நினைக்கும்போது பெருமை கொள்வதாக தெரிவித்தார்.
மேலும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அமுதசுரபி நாளிதழின் ஆசிரியர் முனைவர் திருப்பூர் கிருஷ்ணன் கூறுகையில்:
வள்ளலாரின் நெறிகளுக்கு ஏற்ப, செடி, கொடிகள் முதல் மனிதர்கள் அனைவரிடமும் அன்பாகவும், பண்பாகவும் நடந்தது கொள்ள வேண்டும். நம்மால் முடிந்த வரை அனைவருக்கும் உணவளிக்க வேண்டும் என வள்ளலாரின் பெருமைகள் குறித்தும் சிறப்புரையாற்றினார்.
இந்நிகழ்ச்சியில் எஸ்.ஆர்.எம் கல்லூரியின் தமிழ்ப்பேராய தலைவர் முனைவர் கரு.நாகராசன், திருமூலர் ஆய்விருக்கை இயக்குநர் மகாலட்சுமி, தமிழ் பேராயத்தின் செயலர் முனைவர் பா.ஜெய்கணேஷ், தமிழ் பேராயத்தின் துணைபேராசிரியர் மு.பாலசுப்பிரமணி மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வள்ளலார் உணர்த்தும் வாழ்வியல் நெறிகள் பற்றிய கட்டுரைகள் எழுதி வந்த வள்ளலாரின் சமூக ஆர்வலர்களும், மாணவர்களும் திரளாக கலந்து கொண்டனர்.
Comments
Post a Comment