673 தொழில்முனைவோருக்கு ரூ. 18.52 கோடி மானியத்துடன் ரூ. 63.51 கோடி கடனுதவி

·         வேலூர் மாவட்டத்தில் கடந்த இரண்டரை ஆண்டுகளில் தமிழ்நாடு அரசு சிறு, குறு மற்றும்  நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறையின்கீழ் இயங்கும் மாவட்ட தொழில் மையத்தின் சார்பில் சுய தொழில் தொடங்க பல்வேறு சிறப்பு திட்டங்களின் கீழ் 673 தொழில்முனைவோருக்கு  ரூ. 18.52 கோடி மானியத்துடன் ரூ. 63.51 கோடி  கடனுதவி வழங்கப்பட்டுள்ளது - மாவட்ட ஆட்சித் தலைவர்.

வேலூர் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு சிறு, குறு மற்றும்  நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறையின்கீழ் இயங்கும் மாவட்ட தொழில் மையத்தின் சார்பில் சுய தொழில் தொடங்க பல்வேறு சிறப்பு திட்டங்களின்கீழ் தொழில் முனைவோருக்கு மானியத்துடன் கடனுதவி வழங்கப்பட்டு வருகிறது.

இதில் பட்டியலின மற்றும் பழங்குடியின தொழில்முனைவோருக்கான சிறப்பு திட்டமான அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டத்தில் (AABCS) 35%  மானியத்துடன் அதிகபட்சமாக ரூ.1.50 கோடி வரை மானியத்துடன் கூடிய கடனுதவி  உற்பத்தி, வியாபாரம் மற்றும் சேவை தொழில்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் மூலம் வேலூர் மாவட்டத்தில் 13 பயனாளிகளுக்கு ரூ.0.76  கோடி மானியத்துடன் ரூ.2.16 கோடி கடனுதவி வழங்கப்பட்டுள்ளது.மேலும் புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டு திட்டத்தில்   (NEEDS) 25%  மானியத்துடன் அதிகபட்சமாக ரூ.75 இலட்சம் வரை மானியத்துடன், உற்பத்தி மற்றும் சேவை தொழில்களுக்கு ரூ.5 கோடி வரை  கடனுதவி  வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் மூலம் வேலூர் மாவட்டத்தில்  40 பயனாளிகளுக்கு ரூ. 7.01 கோடி மானியத்துடன் ரூ. 28.06 கோடி கடனுதவி வழங்கப்பட்டுள்ளது.

பாரத பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்க திட்டம் (PMEGP) மூலம் கிராமப்புற பகுதிகளில் தொடங்கப்படும் தொழில்களுக்கு  35%  மானியமும்,  நகர்ப்புற பகுதிகளில் தொடங்கப்படும் தொழில்களுக்கு 25% மானியமும் உற்பத்தி மற்றும் சேவை தொழில்களுக்கு ரூ. 50 இலட்சம் வரை கடனுதவி வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் மூலம் வேலூர் மாவட்டத்தில் 306 பயனாளிகளுக்கு ரூ. 6.74 கோடி மானியத்துடன் ரூ. 19.25 கோடி கடனுதவி  வழங்கப்பட்டுள்ளது. மேலும் வியாபாரம் சார்ந்த தொழில்களுக்கான சிறப்பு திட்டமான வேலையில்லா இளைஞர்களுக்கான  வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின்  (UYEGP) கீழ் 25%  மானியத்துடன் அதிகபட்சமாக ரூ.15 இலட்சம் வரை வியாபாரம் சார்ந்த தொழில்களுக்கு மட்டும் கடனுதவி வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் மூலம் வேலூர் மாவட்டத்தில் 197 பயனாளிகளுக்கு ரூ. 2.41 கோடி மானியத்துடன் ரூ. 9.47  கோடி கடனுதவி  வழங்கப்பட்டுள்ளது. அடுத்ததாக மதிப்புக்கூட்டப்பட்ட உணவு பொருட்கள் உற்பத்திக்கான சிறப்பு திட்டமான பிரதமரின் உணவுப் பதப்படுத்தும் குறுந்தொழில் நிறுவனங்கள் ஒழுங்குப்படுத்தும் திட்டத்தின்  (PMFME) கீழ் 35% மானியத்துடன் ரூ.1 கோடி வரை கடனுதவி வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் மூலம் வேலூர் மாவட்டத்தில் 117 பயனாளிகளுக்கு ரூ.1.60  கோடி மானியத்துடன் ரூ. 4.57 கோடி கடனுதவி வழங்கப்பட்டுள்ளது.

வேலூர் மாவட்டத்தில் மாவட்ட தொழில் மையத்தின் சார்பில் இளைஞர்கள் மற்றும் பல்வேறு தொழில் நிறுவனங்களுக்கு அவர்களின் தொழில் முன்னேற்றத்திற்காக இரண்டரை ஆண்டுகளில் 673 தொழில் முனைவோருக்கு ரூ.18.52 கோடி மானியத்துடன் ரூ.63.51 கோடி கடனுதவி  வழங்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சித் தலைவர் பெ.குமாரவேல்பாண்டியன் தெரிவித்துள்ளார்.

 

 

Comments

Popular posts from this blog

• பெ.தெ.லீ. பாலிடெக்னிக் கல்லூரியில் “மெக்கத்லான் 2024.

• வேலூர் ஜெய்பீம் இரவு பள்ளி கூட்டமைப்பு "ஐம்பெரும் விழா”.