• வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் திருத்த சிறப்பு முகாம்.

·        வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் திருத்த சிறப்பு முகாம்.

                 வேலூர் மாவட்டத்தில் 27/10/2023-ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டு 1303 வாக்குச்சாவடிகள் உள்ள 673 வாக்குச்சாவடி மையங்களிலும், மேலும் வேலூர் மாநகராட்சி அலுவலகம், வேலூர் மற்றும் குடியாத்தம் வருவாய் கோட்ட அலுவலகங்கள் அலனதது வட்டாட்சியர் அலுவலகங்கள், மாநகராட்சியின் மண்டல அலுவலகங்கள்  குடியாத்தம் மற்றும் பேர்ணாம்பட்டு நகராட்சி அலுவலகங்கள், ஆக மொத்தம் 666 இடங்களில் வாக்காளர் பட்டியல் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.இந்த வாக்காளர் பட்டியல் 09.11.2023 முதல் 08.12.2023 வரையிலான காலத்திற்கு பொது மக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டிக்கும்.

                வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பொதுமக்களும் தங்களது பெயர் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளதா என சரி பார்த்து,பெயர் சேர்க்க படிவம் 6 / நீக்கம் செய்ய படிவம் 7/ திருத்தம், முகவரி மாற்றம் செய்ய நகல் அட்டைக்கு விண்ணப்பிக்க மற்றும் மாற்றுத்திறனாளி என்பதை பதிவு செய்ய படிவம்-8 ஆகியவற்றில் விண்ணப்பம் செய்து கொண்டனர்.  

மேற்கூறிய அனைத்து படிவங்களிலும் வாக்காளர்கள் தங்களது விண்ணப்பத்தில் சமீபத்திய வண்ண புகைப்படங்களை மட்டுமே ஒட்டப்பட வேண்டும் எனவும்,  கருப்பு வெள்ளை புகைப்படங்கள் ஏற்கப்பட மாட்டாது எனவும், மேலும் ஆதார் எண் அளிக்கப்பட வேண்டும் என தேர்தல் ஆணையம் தெரிவித்தது. மேலும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க www.voters.eci.gov.in என்ற இந்த தேசிய இணையதளத்தின் மூலமாகவோ, அலைபேசி Voter Helpline App மூலமாகவோ எளிய முறையில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கலாம் மற்றும் திருத்தங்கள் மேற்கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டது.

                ஏற்கனவே வாக்காளர் பட்டியலில் பெயர் இடம் பெற்று வாக்காளர் அடையாள அட்டை மட்டும் இல்லாதவர்கள் மீள பெயர் சேர்க்க விண்ணப்பம் அளிக்க தேவையில்லை. நகல் வாக்காளர் அடையாள அட்டை பெற படிவம்-8  மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். மேலும் தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி 25/11/2023 மற்றும் 26/11/2023 ஆகிய இரண்டு அரசு விடுமுறை நாட்களில் சிறப்பு முகாம் நடைபெற்றது.

                வேலூர் மாவட்டத்தில் வேலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சாய்நாதபுரம் கிருஷ்ணசாமி முதலியார் மேல்நிலைப்பள்ளி மற்றும் அணைக்கட்டு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பாகாயம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஆகிய இடங்களில் நடைபெற்ற வாக்காளர் பட்டியல் பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம் சிறப்பு முகாமை வேலூர் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவருமான பெ.குமாரவேல் பாண்டியன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். வேலூர் வட்டாட்சியர் செந்தில் உட்பட பலர் உடன் இருந்தனர்.

 

Comments

Popular posts from this blog

• வேலூரில் டெய்ட்கோ ஃபவுண்டேஷன் 4-வது மாநில மாநாடு.

• பெ.தெ.லீ கல்லூரியில் இயந்திரவியல் துறை கருத்தரங்கம்.

• P.T. Lee கல்லூரி முதலாம் ஆண்டு மாணவர்கள் வரவேற்பு விழா.