• நம் சந்தை - இயற்கை விவசாயிகள் விற்பனை அங்காடி
நம் சந்தை என்பது விசாயிகள் இயற்கையில் விளைவித்த வேளாண் உற்பத்திப் பொருட்களை நேரடியாக நுகர்வோருக்கு விற்பனை செய்ய தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதர இயக்கம், வேலூர் மூலம் பூமாலை விற்பனை வளாகத்தில் நடைபெற்று வருகிறது.
ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 6 மணி முதல் காலை 11.00 மணி வரையில் நம்சந்தை செயல்பட்டு வருகிறது. நம் சந்தையில் ஒவ்வொரு வாரமும் 65 விவசாயிகள் கலந்துக் கொண்டு பயனடைகிறார்கள்.
இன்று 26.11.2023 ஞாயிற்றுக்கிழமை 201 வாரத்தை முன்னிட்டு மாவட்ட ஆட்சித்தலைவர் குமாரவேல்பாண்டியன் 201 வார நம் சந்தையை தொடங்கி வைத்து அனைத்து இயற்கை விவசாயகளுக்கும் கதராடை அணிவித்து கௌரவித்து பாராட்டினார். அனைத்து விவசாயிகளிடமும் இயற்கை முறையில் உற்பத்தி செய்து விற்பனை செய்வது பற்றியும், நன்கு விற்பனை ஆகிறதா என்றும் விசாரித்து கலந்துரையாடினார்.
நம் சந்தையில் இயற்கை முறையில் நச்சில்லா காய்கறிகள், பழவகைகள், கீரைவகைகள், மூலிகை வகைகள், இளநீர், தேங்காய், மதிப்புக்கூட்டப்பட்ட பாரம்பரிய அரிசிவகைகள், மரச்செக்கு எண்ணெய் வகைகள், மா, வாழை, சப்போட்டா, கொய்யா, நாட்டுமாடு பால், நாட்டுக்கோழி மற்றும் அதன் முட்டைகள் போன்றவை விவசாயிகள் நேரடியாக நுகர்வோருக்கு விற்பனை செய்து வருகிறார்கள். வாரம்தோரும் சராசரியாக ரூ.60,000/ வரையிலும், மாதத்திற்கு ரூ.2,40,000/ வரையிலும், வருடத்திற்கு சுமார் ரூ.28,40, 000 வரை விற்பனையாகிறது.
இந்நிகழ்ச்சியில் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் க.ஆர்த்தி, மகளிர் திட்ட இயக்குநர் யு.நாகராஜன், மாவட்ட வள பயிற்றுநர் (வேளாண்) சம்பத், உதவி திட்ட அலுவலர் தனலட்சுமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Comments
Post a Comment