• “உங்களைத் தேடி உங்கள் ஊரில்“ திட்டம் - நீர்வளத்துறை அமைச்சர் நேரில் ஆய்வு
· “உங்களைத் தேடி உங்கள் ஊரில்“ திட்டம்.
· வேலூர் மாவட்டத்தில் வளர்ச்சி திட்ட பணிகளை மாண்புமிகு நீர்வளத்துறை அமைச்சர் நேரில் பார்வையிட்டு ஆய்வு.
மக்களை நாடி, மக்கள் குறைகளை கேட்டு, உடனுக்குடன் தீர்வு காண அரசு இயந்திரம் களத்திற்கே வரும் ”உங்களைத் தேடி, உங்கள் ஊரில்” என்ற புதிய திட்டம் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அறிவிக்கப்பட்டுள்ளது.
“உங்களைத் தேடி, உங்கள் ஊரில்” திட்டத்தின்படி ஒவ்வொரு மாவட்ட ஆட்சியரும், ஒவ்வொரு மாதமும் 4-வது புதன்கிழமை ஒரு நாள் வட்ட அளவில் (காலை 09.00 மணி முதல் மறுநாள் காலை 09.00 மணி வரை) 24 மணி நேரம் தங்கி கள ஆய்வில் ஈடுபட்டு, அரசு அலுவலகங்களை ஆய்வு செய்து, மக்களின் குறைகளை கேட்டறிந்து, அரசின் அனைத்து நலத்திட்டங்களும், சேவைகளும், தங்கு தடையின்றி மக்களை சென்றடைவதை உறுதி செய்ய வேண்டுமென்று மாண்புமிகு முதலமைச்சர் அவர்களால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதன் அடிப்படையில் வேலூர் மாவட்டத்தில் ”உங்களைத் தேடி, உங்கள் ஊரில்” திட்டம் காட்பாடி வட்டத்தில் இன்று (31.01.2024) செயல்படுத்தப்பட்டது. இத்திட்டத்தின்கீழ் மாண்புமிகு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் நீர்வள துறை, நெடுஞ்சாலைத்துறை, வருவாய் துறை, கூட்டுறவு துறை மற்றும் கால்நடை துறை சார்ந்த வளர்ச்சி பணிகளை ஆய்வு செய்தார்.
இத்திட்டத்தின்கீழ் நீர்வளத்துறை சார்பில் பொன்னை அணைக்கட்டில் ரூ.19.46 கோடி மதிப்பில் நடைபெற்று வரும் புனரமைப்பு பணிகளையும், பொன்னை ஆற்றின் குறுக்கே ரூ.12.95 கோடி மதிப்பில் நடைபெற்று வரும் தரைப்பால பணிகளையும், குகையநல்லூர் கிராமம் அருகே பொன்னை ஆற்றின் குறுக்கே ரூ.12.70 கோடி மதிப்பில் நடைபெற்று வரும் தடுப்பணை அமைக்கும் பணிகளையும், பொன்னை கிராமத்தில் நெடுஞ்சாலை துறையின் சார்பில் ரூ.35 கோடி மதிப்பில் நடைபெற்று வரும் உயர்மட்ட பால பணிகளையும், மேல்பாடி ஊராட்சியில் ரூ.42.68 இலட்சம் மதிப்பில் நடைபெற்று வரும் கால்நடை மருந்தக கட்டட பணிகளையும் மற்றும் பொன்னை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியிலும் மாண்புமிகு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின்போது மாவட்ட ஆட்சி தலைவர் வே.இரா.சுப்புலெட்சுமி, மேல்பாலாறு வடிநில கோட்ட கண்காணிப்பு பொறியாளர் ரமேஷ், நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் குமரேசன், கால்நடை உதவி இயக்குநர் மரு.அந்துவன், காட்பாடி ஒன்றிய குழு தலைவர் வேல்முருகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Comments
Post a Comment