• வேலூர் மாவட்ட விவசாயிகள் குறை தீர்வு நாள் கூட்டம்

 

வேலூர் மாவட்ட  வருவாய் அலுவலர் தலைமையில் இன்று  விவசாயிகள் குறை தீர்வு நாள் கூட்டம்.

            வேலூர் மாவட்ட  வருவாய் அலுவலர் த.மாலதி தலைமையில் ஜனவரி 2024 மாத விவசாயிகள் குறைதீர்வு  நாள் கூட்டம் இன்று (30.01.2024) மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் விவசாயிகள், விவசாய சங்கப் பிரதிநிதிகள் மற்றும் உரிய துறை அலுவலர்கள் பங்கேற்புடன் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் முதலாவதாக சென்ற ஆண்டின் மழையளவு,  மழை மற்றும் புயலால் பாதிப்படைந்த பயிர்களுக்கு விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட இழப்பீடுகள் மற்றும் விவசாயிகள் தற்போது நவரை பட்டத்தில் மேற்கொள்ள வேண்டிய  நடவடிக்கைகள் மற்றும் கரும்பு பயிருக்கு காப்பீடு செய்திட மார்ச் மாதம் வரையில் கால கெடு உள்ள நிலையில் விவசாயிகள் பயிர் காப்பீடு செய்து பயன் பெறுதல் குறித்து ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

            அதனை தொடர்ந்து விவசாயிகளின் பிரதான கோரிக்கைகளான வேளாண்மைத் துறையின் மூலம் இடியினால் சேதமடைந்த தென்னை மரங்களுக்கு இழப்பீடு வழங்குதல், பி.எம்.கிசான் திட்டத்தில் பயனாளிகளுக்கு தொகை வராமல் இருத்தல், வட்டார வேளாண்மை விரிவாக்க மையங்கள் மூலம் நாட்டு விதைகள் வழங்கிட வேண்டி கோரிக்கை வைக்கப்பட்டது.

            தோட்டக்கலை துறையின் மூலம் நாட்டு விதைகள் வழங்குதல், மாஞ்செடிகள் பூச்சி நோய் தாக்குதல்களிலிருந்து தடுத்திட உரிய தரமான மருந்துகளை வழங்குதல் மற்றும் அதற்கான பயிற்சிகளை விவசாயிகளுக்கு வழங்கிட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டி கோரிக்கை வைக்கப்பட்டது.

            வேளாண் வணிகத்துறையின் மூலம் நீரா பாணம் தயாரித்திட அனுமதி வழங்கிட வேண்டி கோரிக்கை வைக்கப்பட்டது.

வேளாண் பொறியியல் துறையின் மூலம் நெல் நடவு செய்யும் இயந்திரம் மற்றும் நெல் நடவு முறைகள் குறித்த பயிற்சிகள் விவசாயிகளுக்கு வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டி கோரிக்கை வைக்கப்பட்டது.   

கால்நடை பராமரிப்புத் துறையின் மூலம் கால்நடைகளுக்கு பெரியம்மை நோய்க்கு தடுப்பூசி வழங்குதல், மற்றும் குடியாத்தம் பகுதியில் கால்நடை சந்தை அமைத்தல், குடியாத்தம் தட்டப்பாறை பகுதியில் கிளை கால்நடை மருத்துவமனை அமைத்தல், கால்நடைகளை நோய்களிலிருந்து காத்திட சிறப்பு முகாம்கள் நடத்திட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டி கோரிக்கைகள் வைக்கப்பட்டது.

கூட்டுறவு துறையின் மூலம் மாதந்திர குறை தீர்க்கும் கூட்டம் நடத்திட வேண்டுதல், காட்பாடி நகர்ப்புற தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம் மற்றும் வெட்டுவாணம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் விவசாயிகளுக்கு பயிர்கடன்கள் வழங்குதல், பென்னாத்தூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் நகைக்கடன் வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டி கோரிக்கை வைக்கப்பட்டது.

நீர் ஆதாரத் துறையின் மூலம் அகரம் ஏரிக்கு தண்ணீர் திறத்தல், காட்பாடி வட்டம் பாலேகுப்பம் ஊராட்சியில் உள்ள கசக்கால்வாய் ஆக்கிரமிப்பு அகற்றுதல், வெட்டுவாணம் கசக்கால்வாய் தூர் வாரிட நடவடிக்கை எடுக்க வேண்டி கோரிக்கைகள் வைக்கப்பட்டது.

வனத்துறையின் மூலம் வனவிலங்குகளால் ஏற்படும் பயிர் சேதங்களுக்கு வழங்கப்படும் இழப்பீட்டு தொகையினை உயர்த்தி வழங்குதல், தழைசெடிகளை உற்பத்தி செய்து விவசாயிகளுக்கு வழங்குதல், மேல்அரசம்பட்டு பகுதியில் காட்டுஎருமைகள் அதிகளவில் உள்ளதை கட்டுப்படுத்திட உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டி கோரிக்கைகள் வைக்கப்பட்டது.

மின்சாரத் துறையின் மூலம் பென்னாத்தூர் கிராமத்தில் 11 இடங்களில் சேதமடைந்துள்ள மின்கம்பங்களை மாற்றுதல், காட்டுப்புத்தூர் பகுதியில் பழுதடைந்துள்ள டிரான்ஸ்பார்ம் மாற்றுதல் மற்றும் தெள்ஞர் கோவிந்தரெட்டிபாளையத்தில் துணை மின் நிலையம் அமைத்திட நடவடிக்கை எடுக்க வேண்டி கோரிக்கை வைக்கப்பட்டது.

வேலூர் மாவட்டத்தில் செயல்படும் வார சந்தைகளில் அதிகமாக கட்டணம் வசூலிக்கப்படுவதால், அதனை குறைத்திட உரிய துறை நடவடிக்கை எடுக்க வேண்டி கோரிக்கை வைக்கப்பட்டது.

            இக்கூட்டத்தில் மாவட்ட வன அலுவலர் கலாநிதி, இணைஇயக்குநர் (வேளாண்மை) சோமு, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அலுவலர் சீதா,  துணை ஆட்சியர் (பயிற்சி)  பிரியா,  மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் ஜமால்மொய்தின் மற்றும்  அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

 

Comments

Popular posts from this blog

• வேலூரில் டெய்ட்கோ ஃபவுண்டேஷன் 4-வது மாநில மாநாடு.

• வேலூர் ஜெய்பீம் இரவு பள்ளி கூட்டமைப்பு "ஐம்பெரும் விழா”.

• பெ.தெ.லீ. பாலிடெக்னிக் கல்லூரியில் “மெக்கத்லான் 2024.