• திருவள்ளுவர் பல்கலைக்கழகம் - மாபெரும் அறிவியல் கண்காட்சி.

 ·        திருவள்ளுவர் பல்கலைக்கழகம் நடத்தும் மாபெரும் அறிவியல் கண்காட்சி - துணைவேந்தர் பேராசிரியர் ஆறுமுகம்.

          திருவள்ளுவர் பல்கலை கழகம் வருகின்ற 07/02/2024 முதல் 10/02/2024 வரை மாபெரும் அறிவியல் கண்காட்சியை நடத்த திட்டமிட்டுள்ளது. திருவள்ளுவர் பல்கலை கழகத்தால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரிகளை சார்ந்த இளநிலை, முதுநிலை ஆராய்ச்சி மாணவர்களும் சுற்று வட்டாரத்தில் உள்ள பள்ளி மாணவர்களும் தங்களுடைய அறிவியல் கண்டுபிடிப்புகளை 07/02/2024 முதல் 10 /02/2024 வரை காட்சிப்படுத்தலாம்.

       மேலும் இது சம்பந்தமாக பல்கலைகழகத்தின் இணையதளத்தை அணுகி அறிவியல் கண்காட்சி சிற்றேடை அணுகலாம். சிறந்த அறிவியல் காட்சிபடுத்துதலுக்கு பரிசுகளை திருவள்ளுவர் பல்கலைகழகம் வழங்க உள்ளது. இந்த அரிய வாய்ப்பினை மாணவர்களும் பொதுமக்களும் நேரடியாக கண்டு கொள்ளலாம்.

          மேலும் நான்கு நாட்களும் அறிவியல் சொற்பொழிவுகள் நடைபெற உள்ளது. மேலும் இக்கண்காட்சியில் நேரடியாக கண்டுகளிக்க நுழைவு கட்டணம் ஏதும் இல்லை என்பதை துணைவேந்தர் பேராசிரியர் ஆறுமுகம் தெரிவித்தார்.

 

Comments

Popular posts from this blog

• வேலூரில் டெய்ட்கோ ஃபவுண்டேஷன் 4-வது மாநில மாநாடு.

• வேலூர் ஜெய்பீம் இரவு பள்ளி கூட்டமைப்பு "ஐம்பெரும் விழா”.

• பெ.தெ.லீ. பாலிடெக்னிக் கல்லூரியில் “மெக்கத்லான் 2024.