“உங்களைத் தேடி உங்கள் ஊரில்“ திட்டம் வேலூர் மாவட்ட ஆட்சி தலைவர் நேரில் ஆய்வு

 ·         மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் சிறப்பு திட்டமான   “உங்களைத் தேடி உங்கள் ஊரில்“ திட்டத்தின் கீழ் காட்பாடி வட்டத்தில்  வேலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

          மக்களை நாடி, மக்கள் குறைகளை  கேட்டு, உடனுக்குடன் தீர்வு காண அரசு இயந்திரம் களத்திற்கே வரும்உங்களைத் தேடி, உங்கள் ஊரில்என்ற புதிய திட்டம் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் அறிவிக்கப்பட்டுள்ளது.

            உங்களைத் தேடி,  உங்கள் ஊரில்திட்டத்தின்படி ஒவ்வொரு மாவட்ட ஆட்சியரும், ஒவ்வொரு மாதமும் 4வது புதன்கிழமை ஒரு நாள் வட்ட அளவில் (காலை 09.00 மணி முதல் மறுநாள் காலை 09.00 மணி வரை) 24 மணி நேரம் தங்கி கள ஆய்வில் ஈடுபட்டு, அரசு அலுவலகங்களை ஆய்வு செய்து, மக்களின் குறைகளை கேட்டறிந்து, அரசின் அனைத்து நலத்திட்டங்களும், சேவைகளும், தங்கு தடையின்றி மக்களை சென்றடைவதை உறுதி செய்ய வேண்டுமென்று மாண்புமிகு முதலமைச்சர் அவர்களால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

            அதன் அடிப்படையில் வேலூர் மாவட்டத்தில் ”உங்களைத் தேடி, உங்கள் ஊரில்  திட்டம் காட்பாடி வட்டத்தில் இன்று (31.01.2024) செயல்படுத்தப்பட்டது. இத்திட்டத்தின்கீழ் மாவட்ட ஆட்சி தலைவர் வே.இரா.சுப்புலெட்சுமி, பிரம்மபுரம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் புறநோயாளிகள் பிரிவு, கருப்பைவாய் பரிசோதனை மையம், தாய்மார்கள் அறை ஆகியவற்றை பார்வையிட்டு  ஆய்வு செய்தார். மேலும் புறநோயாளிகள் பதிவேடு மற்றும் தொற்றா நோய் சிகிச்சை பதிவேடுகளை ஆய்வு செய்தார்.  

         பின்னர் பிரம்மபுரம் கிராம நிர்வாக அலுவலகத்திற்கு சென்று பொதுமக்கள் மற்றும் விவசாயிகளிடம் குறைகளை கேட்டறிந்தார்.

            காட்பாடி வட்டம் மேல்பாடி ஊராட்சியில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட மையம், பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம் ஆகியவற்றில் ஆய்வு மேற்கொண்டார்.  

            இதனை தொடர்ந்து "உங்களைத் தேடி, உங்கள் ஊரில்" திட்டத்தின் கீழ் இன்று (31.01.2024) காட்பாடி வட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட கள ஆய்வுகள் தொடர்பாக அனைத்து துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம்  மாவட்ட ஆட்சி தலைவர் தலைமையில் காட்பாடி வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.

            இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சி தலைவர், துறை சார்ந்த அலுவலர்களிடம்  பொதுமக்களுக்கு அரசு வழங்கும் திட்டங்கள் மற்றும் நலத்திட்ட உதவிகளில் முதன்மையான கவனம் செலுத்த வேண்டும். இரண்டாவதாக பொதுமக்கள் வழங்கும் கோரிக்கை மனுக்களை பெற்று கொண்டு மனுக்களுக்கு தீர்வு காணும் வகையில் விரைந்து செயல்பட வேண்டும். அரசாணை வெளியிடப்பட்ட  திட்டங்களை விரைந்து செயல்படுத்த வேண்டும்.

            அரசின் முக்கிய திட்டங்களான காலை உணவு திட்டம், புதுமைப்பெண் திட்டம், கலைஞரின் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டம், மாற்று திறனாளிகள் குறித்த கணக்கெடுப்பு மற்றும் அவர்களுக்கான நலத்திட்டங்கள், மருத்துவமனைகளில் தரமான சிகிச்சைகளை வழங்குதல் ஆகியவற்றில் அதிக கவனம் செலுத்த வேண்டுமென அறிவுறுத்தினார்.

            தொடர்ந்து மாவட்ட ஆட்சி தலைவர் "உங்களைத் தேடி, உங்கள் ஊரில்" திட்டத்தின் கீழ் காட்பாடி வட்டத்திற்குட்பட்ட பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை  பெற்றுக் கொண்டார்.

            இந்த ஆய்வில் மாவட்ட வருவாய் அலுவலர் த.மாலதி, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் க.ஆர்த்தி, வேலூர் மாநகராட்சி ஆணையாளர் ஜானகி ரவீந்திரன், வேலூர் வருவாய் கோட்டாட்சியர் (பொ) இராமசந்திரன்,  மேல் பாலாறு வடிநிலக்கோட்ட கண்காணிப்பு பொறியாளர் ரமேஷ், நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் குமரேசன், கால்நடை உதவி இயக்குநர் மரு.அந்துவன், காட்பாடி ஒன்றிய குழு தலைவர் வேல்முருகன், காட்பாடி வட்டாட்சியர் ஜெகதீஸ்வரன், சமூக பாதுகாப்பு திட்ட வட்டாட்சியர் ஸ்ரீராம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

 

Comments

Popular posts from this blog

• பெ.தெ.லீ. பாலிடெக்னிக் கல்லூரியில் “மெக்கத்லான் 2024.

• வேலூர் ஜெய்பீம் இரவு பள்ளி கூட்டமைப்பு "ஐம்பெரும் விழா”.