• வேலூரில் சவரத்தொழிலாளர்கள் சங்கம் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்பாட்டம்

 ·         வேலூரில் தமிழ்நாடு சவரத்தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பில் கவன  ஈர்ப்பு ஆர்பாட்டம்.

     வேலூர், சத்துவாச்சாரியில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் தமிழ்நாடு சவர தொழிலாளர் சங்கத்தின் சார்பில் கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி கவன ஈர்ப்பு ஆர்பாட்டம் மாவட்ட தலைவர் வெங்கடேசன் தலைமையில் நடைபெற்றது.

     இதில் வேனுகோபால், சந்திரசேகர், ஜெய்சங்கர், சண்முகம் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதில் எஸ்.சி., எஸ்.டி பிரிவினர்களுக்கு சட்டமன்ற, நாடாளுமன்ற தேர்தலில் இட ஒதுக்கீடு உள்ளதை போல் தங்களுக்கும் 2 சதவிகிதம் இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும்.

            மேலும் கல்வி, வேலைவாய்ப்பு போன்றவற்றிலும் தனி இட ஒதுக்கீடு அளிக்க கோரியும், அரசு நகராட்சி, மாநகராட்சி மற்றும் வீட்டுவசதி வாரிய பகுதிகளில் அமைக்கப்படும் வணிக வளாகங்களில் முடிதிருத்தும் கடைகள் வைக்க இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும்.

     வங்கிகள் முடி திருத்தும் கடைகளுக்கு மானியத்துடன் வங்கி கடனை அளிக்க வேண்டும். இத்தொழிலில் கார்ப்பரேட் நிறுவனங்கள் ஈடுபடுவதை தடுக்கவும், இந்து அறநிலைய துறை கோவில்களில் பணியாற்றும் முடி எடுக்கும் தொழிலாளர்கள், இசை கலைஞர்களை அரசு ஊழியர்களாக்க வேண்டும். மேலும் சலூன் கடைகளுக்கு விதிக்கப்படும் தொழில் உரிமம் மற்றும் தொழில் வரி விதிப்பில் உள்ள குளறுபடிகளை நீக்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்பாட்டம் நடைபெற்றது.

பேட்டி: வெங்கடேசன் (சவர தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர்)

 

Comments

Popular posts from this blog

• வேலூரில் டெய்ட்கோ ஃபவுண்டேஷன் 4-வது மாநில மாநாடு.

• வேலூர் ஜெய்பீம் இரவு பள்ளி கூட்டமைப்பு "ஐம்பெரும் விழா”.

• பெ.தெ.லீ. பாலிடெக்னிக் கல்லூரியில் “மெக்கத்லான் 2024.