• வேலூர் மத்திய சிறையிலிருந்து இரண்டு சிறைவாசிகள் முன்விடுதலை - நலதிட்ட உதவிகள்.

 

·         வேலூர் மத்திய சிறையிலிருந்து இரண்டு சிறைவாசிகள் முன்விடுதலை - முன்னாள் சிறைவாசிகள் ஆதரவு சங்கத்தின் சார்பில் நலதிட்ட உதவிகள்.

     வேலூர் மத்திய சிறையிலிருந்து அரசின் முன்விடுதலையில் செல்லும் ஆயுள் தண்டனை சிறைவாசிகள் மறுவாழ்விற்காக தமிழ்நாடு முன்னாள் சிறைவாசிகள் ஆதரவு சங்கத்தின் சார்பில் 21 வகையான அத்தியாவசிய உணவு, மளிகை பொருட்கள் வழங்கப்பட்டன. 

     வேலூர் மத்திய சிறை வாசலில் நடைபெற்ற நிகழ்விற்கு வேலூர் மாவட்ட முன்னாள் சிறைவாசிகள் ஆதரவு சங்கத்தின் துணைத் தலைவரும் மூத்த வழக்கறிஞருமான டி.எம்.விஜயராகவலு  தலைமை தாங்கினார்.    முன் விடுதலைக்கான ஆணைகளை வேலூர் மத்திய சிறை கண்காணிப்பாளர் .எஸ்.அப்துல்ரஹ்மான் வழங்கினார். செயலாளர் முனைவர் செ.நா.ஜனார்த்தனன், பொருளாளர் ஆர்.சீனிவாசன் ஆகியோர்  அரிசி, பருப்பு, உப்பு, புளி, மிளகாய் உள்ளிட்ட 21 வகையான மளிகை பொருட்களை வழங்கினார்.

     இந்த நிகழ்வின்போது சிறை நல அலுவலர் ஆர்.மோகன் அலுவலக கண்காணிப்பாளர் கே.நாகேஸ்வரி ஆகியோர் உடன் இருந்தார்.

     வேலூர் மாவட்டம், சத்துவாச்சாரியை சேர்ந்த கே.செல்வம் /பெ கண்ணன், மற்றும் சென்னை மாவட்டம், திருவான்மையூரை சேர்ந்த  கே.மோகன் த/பெ. கண்ணன் ஆகிய இருவர் முன் விடுதலை செய்யப்பட்டனர். அவர்களுக்கு தமிழ்நாடு முன்னாள் சிறைவாசிகள் ஆதரவு சங்கத்தின் சார்பில் மளிகை பொருட்கள் அரிசி, பருப்பு, புளி, கடலை எண்ணெய் உள்ளிட்ட 21 வகையான பொருட்கள் வழங்கப்பட்டன.

 

Comments

Popular posts from this blog

• பெ.தெ.லீ. பாலிடெக்னிக் கல்லூரியில் “மெக்கத்லான் 2024.

• வேலூர் ஜெய்பீம் இரவு பள்ளி கூட்டமைப்பு "ஐம்பெரும் விழா”.