· பாராளுமன்ற பொதுத்தேர்தல் 2024- ஐ முன்னிட்டு வாக்காளர்கள் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் - மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் . காட்பாடி கசம் பகுதியில் உள்ள முதியோர் பாலர் விடுதியில் பாராளுமன்ற பொது த் தேர்தல் 2024 ஐ முன்னிட்டு 100% வாக்களிப்ப து குறித்து மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் வே . இரா . சுப்புலெட்சுமி , தலைமையில் இன்று (26.03.2024) உறுதிமொழி எடுத்து கொள்ளப்பட்டது. மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் வே . இரா . சுப்புலெட்சுமி , தெரிவித்ததாவது. நம்முடைய நாடு ஜனநாயக நாடு . அந்த ஜனநாயகத்தை உறுதி செய்வதற்காக தேர்தல் எனும் திருவிழா 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படுகிறது. நம்முடைய பிரதிநிதியை தேர்ந்தெடுக்க ஒவ்வொரு இந்திய குடிமக்களுக்கும் வாக்குரிமை அளிக்கப்பட்டுள்ளது . ...