· வேலூரில் டெய்ட்கோ (TEIDCO FOUNDATION) ஃபவுண்டேஷன் 4- வது மாநில மாநாடு . · 40 அரங்குகளில் வர்த்தக கண்காட்சி, பாவலர் முகில் கலைக் குழுவினரின் கலை நிகழ்ச்சி - பல மாநிலங்களிலிருந்து பங்கேற்பு. · டெய்ட்கோ வர்த்தக மையத்தை திறந்து வைத்து ஐஏஎஸ் அதிகாரிகள், முன்னாள் எம் . பி. வாழ்த்துரை. வேலூர் அடுத்த பொய்கையில், ரஞ்சன் மஹாலில் திறன்மிகு தொழில் முனைவோர் மற்றும் தொழில்துறை மேம்பாட்டு பேரவையின் (TEIDCO FOUNDATION) நான்காவது மாநில மாநாடு வெகு சிறப்பாகவும் பயனுள்ளதாகவும் நடைபெற்றது . வேலூர் மண்டல தலைவர் மகாதினகரன் தலைமையில் நடைபெற்ற இந்த மாநாட்டில் தேசிய துணைதலைவர் மு . முத்துகுமாரசாமி அனைவரையும் வரவேற்றார் . தேசிய துணைதலைவர் மு . அசோக்குமார், தேசிய துணைபொதுசெயலாளர் க . உஷாராணி , ஆலோசகர்கள் ...
· வேலூர் ஜெய்பீம் இரவு பள்ளி கூட்டமைப்பு மற்றும் டெட்க்கோ ஃபவுண்டேஷன் இணைந்து " ஐம்பெரும் விழா”. · பொருளாதார திட்ட உதவி ரூ. 11 லட்சம் கடனுதவி காசோலை வழங்கல் . வேலூர் பொய்கை ஆதி பகவன் புத்தர் அறிவாலயத்தில் ஜெய்பீம் இரவு பள்ளி கூட்டமைப்பு மற்றும் வேலூர் மண்டலம் , டெட்க்கோ ஃபவுண்டேஷன் , இணைந்து " ஐம்பெரும் விழா” வெகு விமரிசையாக நடைபெற்றது. வேலூர் பொய்கை ஆதி பகவன் புத்தர் அறிவாலயத்தில் நடந்த " ஐம்பெரும் விழாவில் " டெட்க்கோ ஃபவுண்டேஷன் நிறுவனரும், தேசிய தலைவருமான சு . சுந்தரவடிவேல் , தேசிய பொதுச் செயலாளர் பெ . சந்திரன் , தேசிய துணை தலைவர் மு . முத்துகுமாரசாமி மற்றும் வேலூர் மண்டல நிர்வாகிகள், வேலூர் , திருப்பத்தூர் , இராணிப்பேட்டை மாவட்ட பொறுப்பாளர்களும், உறுப்பினர்களும் பங்கேற்று சிறப்பித்தனர் . விழாவில் அண்ணல் அம்பேத்கர் திருவுருவப...
· காஞ்சிபுரம் பெ . தெ . லீ செங்கல்வராய நாயக்கர் பொறியியல் தொழில்நுட்ப கல்லூரியில் இயந்திரவியல் துறை கருத்தரங்கம் . · பல்வேறு துறைகளில் சென்சாரின் செயல்பாடுகள் - கல்லூரி இயக்குனர் பேராசிரியர் டாக்டர் மா . அருளரசு . சென்னையை தலைமை இடமாக கொண்டு செயல்படும் பெ . தெ . லீ செங்கல்வராய நாயக்கர் அறக்கட்டளையின்கீழ் பல்வேறு கல்வி நிறுவனங்கள் செயல்படுகின்றன . அவ்வறக்கட்டளையின் காஞ்சிபுரம் மாவட்டம் , ஊவேரியில் பீ . டி . லீ செங்கல்வராய நாயக்கர் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியும் செயல்படுகிறது . இக்கல்லூரியில் , அறக்கட்டளை தலைவர் நீதியரசர் பொன் . கலையரசன் மற்றும் அறங்காவலர்களின் வழிகாட்டுதல்களோடு தொடர்ந்து பல கல்விசார் நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன . இக்கல்லூரியில் செயல்படும் எந்திரவியல் துறை சார்பாக கருத்தரங்கம் நடைபெற்றது . இக்கருத்தரங்க நிகழ்ச்சியில் கல்லூரி இயக்குனர் பேராசிரியர் டாக்டர் மா . அருளரசு மற்றும் கல்லூரி முதல்வ...
Comments
Post a Comment