நிழற்பந்தல் மற்றும் இருக்கைகள் உட்பட விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள்

·         பாராளுமன்ற பொதுத்தேர்தல் 2024 ஐ முன்னிட்டு வேலூர் மாவட்டத்தில் உள்ள வாக்குச்சாவடிகளில் வாக்களிக்க வரும் பொதுமக்களை வெப்பத்தின் தாக்கத்திலிருந்து பாதுகாக்க நிழற்பந்தல் மற்றும் இருக்கைகள் உட்பட விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள்  செய்யப்படவுள்ளதாக மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார்.

                பாராளுமன்ற பொதுத்தேர்தல் 2024-ஐ முன்னிட்டு வேலூர் மாவட்டத்தில் உள்ள 5 சட்டமன்ற தொகுதிகளில் மொத்தம் 1307 வாக்குச்சாவடி மையங்கள் உள்ளன. இவ்வாக்குச்சாவடி மையங்கள் அனைத்தும் பொதுமக்கள் எளிதில் அணுகும் வகையில் தரைதளத்திலேயே அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு வாக்குச்சாவடி மையத்திலும் மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோர் வாக்களிக்க ஏதுவாக சாய்தள வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

                        மேலும் ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் அடிப்படை வசதிகளான குடிநீர் மற்றும் கழிவுநீர் வசதிகள்  சீராக உள்ளதா என ஏற்கனவே சம்பந்தப்பட்ட அலுவலர்களால் ஆய்வு செய்யப்பட்டு உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் வாக்குப்பதிவு தினத்தன்று தடையில்லா மின்சாரம் வழங்க மின்வாரியத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

                        வேலூர் மாவட்டத்தில்  மூன்று அல்லது அதற்கு  மேற்பட்ட வாக்குப்பதிவு மையங்கள் உள்ள  142 இடங்களில்  மருத்துவ குழுக்கள் ஏற்பாடு செய்யப்படவுள்ளது. மேலும்  நான்கு அல்லது அதற்கு  மேற்பட்ட வாக்குப்பதிவு மையங்கள் உள்ள 73 இடங்களில்  குழந்தைகளை பராமரிக்கும் மையங்கள் (Creche) அமைக்கப்பட வுள்ளன. இம்மையங்களில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டத்தின் சார்பில் பயிற்சி பெற்ற ஒரு உதவியாளர் மற்றும் தன்னார்வலர்கள் நியமிக்கப்படவுள்ளனர். முடிந்தவரை வாக்குப்பதிவு மையங்களுக்கு குழந்தைகளை அழைத்து வருவதை பெற்றோர்கள் தவிர்க்கவும்.

                        ஒவ்வொரு வாக்குச்சாவடி மையத்திலும் வாக்காளர் விழிப்புணர்வு மற்றும் தகவல் அடங்கிய சுவரொட்டிகள் காட்சிப்படுத்தபடவுள்ளன. மேலும் வாக்குச்சாவடி நிலை அலுவலர் நிலையில் அலுவலர்களுடன்  வாக்காளர் உதவி மையம் அமைக்கப்படவுள்ளது. 

                        ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவ தன்னார்வலர்கள் நியமிக்கப்படவுள்ளனர். வாக்குச்சாவடிகளில் சக்கர நாற்காலி தேவைப்படும் மாற்றுத் திறனாளிகள் தேர்தல் ஆணையத்தின்  saksham-  எனும் செயலியில்  பதிவு செய்யலாம்.

                        ஒவ்வொரு வாக்குச்சாவடி மையங்களிலும் ஆண் வாக்காளர்கள், பெண் வாக்காளர்கள் மற்றும் மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் என தனித்தனியே 3 வரிசைகள் ஏற்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. கோடை வெப்பத்தின் காரணமாக ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும்  நிழற்பந்தல்கள் மற்றும் பொதுமக்கள் அமர இருக்கைகள் ஏற்பாடு செய்யப்படவுள்ளது.

                        வேலூர் மாவட்டத்தில் உள்ள வாக்குச்சாவடிகளில் பொதுமக்கள் வாக்களிக்க ஏதுவாக மேற்கண்ட விரிவான வசதிகள் மற்றும்  பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படவுள்ளதாக மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் வே.இரா.சுப்புலெட்சுமி தெரிவித்துள்ளார்.

Comments

Popular posts from this blog

• வேலூரில் டெய்ட்கோ ஃபவுண்டேஷன் 4-வது மாநில மாநாடு.

• வேலூர் ஜெய்பீம் இரவு பள்ளி கூட்டமைப்பு "ஐம்பெரும் விழா”.

• பெ.தெ.லீ. பாலிடெக்னிக் கல்லூரியில் “மெக்கத்லான் 2024.