வாக்காளர்கள் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும்
காட்பாடி கசம் பகுதியில் உள்ள முதியோர் பாலர் விடுதியில் பாராளுமன்ற பொதுத்தேர்தல் 2024 ஐ முன்னிட்டு 100% வாக்களிப்பது குறித்து மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் வே.இரா.சுப்புலெட்சுமி, தலைமையில் இன்று (26.03.2024) உறுதிமொழி எடுத்து கொள்ளப்பட்டது.
மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் வே.இரா.சுப்புலெட்சுமி, தெரிவித்ததாவது.
நம்முடைய நாடு ஜனநாயக நாடு. அந்த ஜனநாயகத்தை உறுதி செய்வதற்காக தேர்தல் எனும் திருவிழா 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படுகிறது. நம்முடைய பிரதிநிதியை தேர்ந்தெடுக்க ஒவ்வொரு இந்திய குடிமக்களுக்கும் வாக்குரிமை அளிக்கப்பட்டுள்ளது.
அந்த வாக்குரிமையை பயன்படுத்தி நம்முடைய நாட்டை ஆளக்கூடிய தலைமையை தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு நமக்கு வழங்கப்பட்டுள்ளது. 100% அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்ற விழிப்புணர்வு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பொதுமக்களிடையே ஏற்படுத்தப்பட்டிருக்கிறது.
18 வயது நிரம்பிய இளம் வாக்காளர்களாக இருந்தாலும், 60 வயதிற்கு மேற்பட்ட மூத்த வாக்காளர்களாக இருந்தாலும், மாற்றுத்திறனாளிகள் மற்றும் மூன்றாம் பாலினத்தவர் என அனைவரும் அவர்களுடைய வாக்கை செலுத்த வேண்டும் என இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. எனவே இந்த முதியோர் இல்லத்தில் தங்கியுள்ள நீங்கள் அனைவரும் உங்களுடைய வாக்கினை தவறாமல் செலுத்த வேண்டும் என மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் வே.இரா.சுப்புலெட்சுமி தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் த.மாலதி, மகளிர் திட்ட இயக்குநர் யு.நாகராஜன், மாவட்ட சமூக நல அலுவலர் ர.உமா, காட்பாடி வட்டாட்சியர் சரவணன் மற்றும் மகளிர் திட்ட அலுவலக பணியாளர்கள் கலந்து கொண்டனர்
Comments
Post a Comment