உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.45,28,260/- ரொக்கப்பணம் பறிமுதல்

·         வேலூர்  மாவட்டத்தில் பறக்கும் படை மற்றும் நிலை கண்காணிப்பு  குழுக்களின்  வாகன சோதனைகளில்   இதுவரை  உரிய  ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.45,28,260/-  ரொக்கப்பணம்  பறிமுதல்.

                        பாராளுமன்ற பொதுத்தேர்தல் 2024-  முன்னிட்டு தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் வேலூர் மாவட்டத்தில் ஒரு சட்டமன்றத் தொகுதிக்கு  3  குழுக்கள் என  5  சட்டமன்ற தொகுதிகளுக்கு 15 பறக்கும் படை குழுக்கள் மற்றும் 15 நிலை கண்காணிப்பு குழுக்கள் ஏற்படுத்தப்பட்டு தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றன.

                இந்நிலையில், வேலூர் மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்த நாள் முதல் 24.03.2024 வரை காட்பாடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில்  வாகன தணிக்கையில் ஈடுபடும்போது  உரிய ஆவணமின்றி எடுத்து செல்லப்பட்ட  ரூ.9,49,500/-  ரொக்கப்பணமும், ரூ.40,330/- மதிப்பில் 281  மதுபாட்டில்களும், ரூ.4,41,945/- மதிப்பில் பட்டு சேலைகளும்

                அணைக்கட்டு  சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில்  வாகன தணிக்கையில் ஈடுபடும்போது  உரிய ஆவணமின்றி எடுத்து  செல்லப்பட்ட ரூ.5,89,500/-  ரொக்கப்பணம்,                  குடியாத்தம்  சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில்  வாகன தணிக்கையில் ஈடுபடும்போது  உரிய ஆவணமின்றி எடுத்து செல்லப்பட்ட ரூ.5,12,200/-   ரொக்கப்பணம்

                வேலூர்  சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில்  வாகன தணிக்கையில் ஈடுபடும்போது  உரிய ஆவணமின்றி எடுத்து செல்லப்பட்ட ரூ.16,59,790/-ரொக்கப்பணம்

                 கீ..குப்பம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில்  வாகன தணிக்கையில் ஈடுபடும்போது  உரிய ஆவணமின்றி எடுத்து செல்லப்பட்ட ரூ.8,17,270/- ரொக்கப்பணமும், 634 சுடிதார் ஆடைகள்   பறக்கும் படை  குழு மற்றும் நிலை கண்காணிப்பு  குழுவினரால் பறிமுதல்  செய்யப்பட்டுள்ளது.

                தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்ட நாள்முதல் 24.03.2024 வரை வேலூர் மாவட்டத்தில் உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.45,28,260/-  ரொக்கப்பணமும், ரூ.40,330/-   மதிப்பில் 281  மதுபாட்டில்களும், ரூ.4,41,945/-  மதிப்பில் பட்டு சேலைகளும், 634 சுடிதார் ஆடைகளும்  பறக்கும் படை  குழு மற்றும் நிலை கண்காணிப்பு  குழுவினரால் பறிமுதல் செய்யப்பட்டு அரசு  கருவூலங்களில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

                இவற்றில் மேல்முறையீட்டு குழுவில் உரிய ஆவணங்களை சமர்ப்பித்த காரணத்தினால் ரூ.11,43,500/-  ரொக்கப்பணம் உரிமையாளர்களிடம் திரும்ப ஒப்படைக்கப்பட்டுள்ளது.

 

Comments

Popular posts from this blog

• பெ.தெ.லீ. பாலிடெக்னிக் கல்லூரியில் “மெக்கத்லான் 2024.

• வேலூர் ஜெய்பீம் இரவு பள்ளி கூட்டமைப்பு "ஐம்பெரும் விழா”.