Posts

Showing posts from April, 2024

கோவிலுக்கு சென்றவர்களை கோட்டையில் வைத்து பூட்டிய தொல்லியல் துறை அதிகாரி

Image
·          வேலூர் சித்ரா பௌர்ணமி கோவிலுக்கு சென்ற சுமார் 750- க்கும் மேற்பட்டோரை கோட்டையில் வைத்து பூட்டிய தொல்லியல் துறை அதிகாரி – காவல் துறையில் புகார் . ·          கோவில் வழிபாட்டை தடுக்க முயற்சி பொதுமக்களை திரட்டி போராட்டம் நடத்த இந்து அமைப்புகள் முடிவு.       வேலூர் மாவட்டம் , வேலூர் கோட்டையில் ஸ்ரீஜலகண்டீஸ்வரர் ஆலயம் உள்ளது. இங்கு சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு ஆயிரக்கணக்கானோர் கோவிலில் சுவாமி வழிபாடு நடத்தினர்.              இந்த நிலையில் இந்த கோட்டை தொல்லியல் துறையின் கட்டுபாட்டில் உள்ளதால் எந்தவித முன் அறிவிப்புமில்லாமல் கோவில் உள்ளே பக்தர்கள் சுமார் 750- க்கும் மேற்பட்டோரை உள்ளே வைத்து கோட்டையின் கேட்டை இழுத்து மூடி பூட்டு போட்டு விட்டனர். கோட்டையின் உள்ளே இருந்த பக்தர்கள் வெளியில் செல்ல வேண்டுமென கேட்டும் அவர்களை வெளியில் செல்ல அனுமதிக்கவில்லை. ...

• வேலூர் ஜலகண்டீஸ்வரர் ஆலய பிரம்மோற்சவம் - விடையாற்றி உற்சவம்

Image
·          வேலூர் ஜலகண்டீஸ்வரர் ஆலய பிரம்மோற்சவம் - விடையாற்றி உற்சவம்.        வேலூர் மாவட்டம் , வேலூர் கோட்டையினுள் உள்ள அருள்மிகு ஸ்ரீ ஜலகண்டீஸ்வரர் ஆலயத்தில் 43- ஆம் ஆண்டு சித்திரை பெருவிழா கடந்த 13- ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி பூப்பல்லக்குடன் விழா நிறைவு பெற்றது.           இதனை தொடர்ந்து நேற்று பஞ்சமூர்த்தி அலங்காரம் செய்து சுவாமிகளுக்கு விடையாற்றி உற்சவம் நடைபெற்றது. இதில் சுவாமிக்கு சிறப்பு தீபாராதனைகள் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் பொதுமக்களும் பங்கேற்று சுவாமி வழிபாடு செய்தனர். இன்று எல்லா சிலைகளுக்கும் உற்சவசாந்தி அபிஷேகம் நடத்தப்படவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.  

அரசு பள்ளிகளில் மேல்நிலை வகுப்பு பயிலும் மாணவ, மாணவிகளுக்கு உயர் கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சி.

Image
·          வேலூர்   மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் மேல்நிலை வகுப்பு பயிலும் மாணவ , மாணவிகளுக்கு உயர் கல்வியில் வழிகாட்டும் “ என் கல்லூரி கனவு ” எனும் உயர் கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சி .                 வேலூர் மாவட்டத்தில்   அரசு பள்ளிகளில் மேல்நிலை வகுப்பு பயிலும் மாணவ , மாணவிகளுக்கு உயர்கல்வியில் வழிகாட்டும் “ என் கல்லூரிக் கனவு ” எனும் உயர் கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சியை     மாவட்ட வருவாய் அலுவலர் த . மாலதி இன்று (25.04.2024) வி . ஐ . டி . கல்லூரி அண்ணா கலையரங்கில்   தொடங்கி வைத்தார் .                 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் சார்பில் வேலூர் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளில் மேல்நிலை வகுப்பு பயிலும் மாணவ, மாணவிகளுக்கு உயர் கல்வி பயில வழிகாட்டும்   நிகழ்ச்சி ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது.        ...

• பிரம்மோற்சவம் ஸ்ரீ ஜலகண்டீஸ்வரர் ஆலயத்தில் தீர்த்தவாரி - நடராஜர் அபிஷேகம்.

Image
·         பிரம்மோற்சவத்தை முன்னிட்டு ஸ்ரீ ஜலகண்டீஸ்வரர் ஆலயத்தில் தீர்த்தவாரி மற்றும் நடராஜர் அபிஷேகம்.    வேலூர் மாவட்டம் , வேலூர் கோட்டையில் உள்ள ஸ்ரீஜலகண்டீஸ்வரர் அகிலாண்டீஸ்வரி அம்மன் ஆலயத்தில் பிரம்மோற்சவத்தை முன்னிட்டு ஸ்ரீ நடராஜர் சிவகாமசுந்தரி அம்பாளுக்கு தேன் , பால் , தயிர் , விபூதி, சந்தனம் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டது. வேதமந்திரங்கள் முழங்க சிறப்பு யாகம் நடைபெற்றது.       சுவாமி சிறப்பு அலங்காரங்களுக்கு பின்னர் மேளதாளங்கள் முழங்க ஆலய குள தீர்த்தவாரி அருகில் சுவாமியை வைத்து குளத்தில் வேதமந்திரங்கள் முழங்க பூஜைகள் செய்யப்பட்டு தீர்த்தவாரி நடைபெற்றது. இதன் பின்னர் சுவாமி மீண்டும் ஆலயத்தினுள் கொண்டு செல்லப்பட்டது.       பின்னர் நடராஜருக்கு வில்வ மாலைகள் மலர் மாலைகளால் ஸ்ரீ நடராஜர் சிவகாம சுந்தரி அம்பாளக்கு சிறப்பு அலங்காரங்களை செய்து மகாதீபாராதனைகளும் நடைபெற்றது. பின்னர் உற்சவ மூர்...