• பிரம்மோற்சவம் ஸ்ரீ ஜலகண்டீஸ்வரர் ஆலயத்தில் தீர்த்தவாரி - நடராஜர் அபிஷேகம்.

·        பிரம்மோற்சவத்தை முன்னிட்டு ஸ்ரீ ஜலகண்டீஸ்வரர் ஆலயத்தில் தீர்த்தவாரி மற்றும் நடராஜர் அபிஷேகம்.

   வேலூர் மாவட்டம், வேலூர் கோட்டையில் உள்ள ஸ்ரீஜலகண்டீஸ்வரர் அகிலாண்டீஸ்வரி அம்மன் ஆலயத்தில் பிரம்மோற்சவத்தை முன்னிட்டு ஸ்ரீ நடராஜர் சிவகாமசுந்தரி அம்பாளுக்கு தேன், பால், தயிர், விபூதி, சந்தனம் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டது. வேதமந்திரங்கள் முழங்க சிறப்பு யாகம் நடைபெற்றது.

     சுவாமி சிறப்பு அலங்காரங்களுக்கு பின்னர் மேளதாளங்கள் முழங்க ஆலய குள தீர்த்தவாரி அருகில் சுவாமியை வைத்து குளத்தில் வேதமந்திரங்கள் முழங்க பூஜைகள் செய்யப்பட்டு தீர்த்தவாரி நடைபெற்றது. இதன் பின்னர் சுவாமி மீண்டும் ஆலயத்தினுள் கொண்டு செல்லப்பட்டது.

     பின்னர் நடராஜருக்கு வில்வ மாலைகள் மலர் மாலைகளால் ஸ்ரீ நடராஜர் சிவகாம சுந்தரி அம்பாளக்கு சிறப்பு அலங்காரங்களை செய்து மகாதீபாராதனைகளும் நடைபெற்றது. பின்னர் உற்சவ மூர்த்தி நடராஜர் சிவகாமசுந்தரி அம்பாளுக்கும் மகாதீபாராதணைகள் நடந்தது.

     தொடர்ந்து மேளதாளங்கள் முழங்க சுவாமி ஊர்வலமாக திரு வீதி உலாவுக்காக கொண்டு செல்லப்பட்டது. இந்த தீர்த்தவாரி விழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

 

Comments

Popular posts from this blog

• வேலூரில் டெய்ட்கோ ஃபவுண்டேஷன் 4-வது மாநில மாநாடு.

• வேலூர் ஜெய்பீம் இரவு பள்ளி கூட்டமைப்பு "ஐம்பெரும் விழா”.

• பெ.தெ.லீ. பாலிடெக்னிக் கல்லூரியில் “மெக்கத்லான் 2024.