கோவிலுக்கு சென்றவர்களை கோட்டையில் வைத்து பூட்டிய தொல்லியல் துறை அதிகாரி

·         வேலூர் சித்ரா பௌர்ணமி கோவிலுக்கு சென்ற சுமார் 750-க்கும் மேற்பட்டோரை கோட்டையில் வைத்து பூட்டிய தொல்லியல் துறை அதிகாரி – காவல் துறையில் புகார்.

·         கோவில் வழிபாட்டை தடுக்க முயற்சி பொதுமக்களை திரட்டி போராட்டம் நடத்த இந்து அமைப்புகள் முடிவு.

     வேலூர் மாவட்டம், வேலூர் கோட்டையில் ஸ்ரீஜலகண்டீஸ்வரர் ஆலயம் உள்ளது. இங்கு சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு ஆயிரக்கணக்கானோர் கோவிலில் சுவாமி வழிபாடு நடத்தினர்.

            இந்த நிலையில் இந்த கோட்டை தொல்லியல் துறையின் கட்டுபாட்டில் உள்ளதால் எந்தவித முன் அறிவிப்புமில்லாமல் கோவில் உள்ளே பக்தர்கள் சுமார் 750-க்கும் மேற்பட்டோரை உள்ளே வைத்து கோட்டையின் கேட்டை இழுத்து மூடி பூட்டு போட்டு விட்டனர். கோட்டையின் உள்ளே இருந்த பக்தர்கள் வெளியில் செல்ல வேண்டுமென கேட்டும் அவர்களை வெளியில் செல்ல அனுமதிக்கவில்லை. மேலும் கோட்டையின் உள்ளேயும் யாரையும் அனுமதிக்கவில்லை. இதனால் பக்தர்கள் காவல் துறையுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

     அங்கு வந்த இந்து முன்னணியினர் கேட்டை அவர்களே திறக்க ஒருவருக்கொருவர் தள்ளு முள்ளானது. பின்னர் காவல் துறையினர் தலையிட்டு பொதுமக்கள் சென்று வர அனுமதித்தனர். சுமார் முக்கால் மணி நேரமாக பக்தர்கள் சென்று வர அனுமதித்தனர்.

     இதன் பின்னர் இந்த சம்பவம் குறித்து வேலூர் பக்தர்கள், இந்து இயக்கத்தினர், பல்வேறு சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகள், ஜலகண்டீஸ்வரர் தரும ஸ்தாபன நிர்வாகிகள் ஆகியோர் ஒருங்கிணைந்து கூட்டம் நடத்தினர்.

     இதில் பக்தர்களை சிறை வைத்த தொல்லியல் துறை அதிகாரிகள் மீது காவல் துறையிடம் புகார் அளிப்பது எனவும், நாளை சுமார் 500-க்கும் மேற்பட்டோர் வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியரிடம் தொல்லியல் துறை அதிகாரி அகல்யா மீது புகார் அளிப்பது எனவும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

            தொல்லியல் துறை இக்கோட்டையை சரியாக பராமரிப்பதே கிடையாது. ஆனால் கோட்டையில் நடக்கும் வழிபாட்டை எப்படியாவது தடுக்க வேண்டுமென முழு மூச்சில் அதிகாரி செயல்படுகிறார்.

     சுமார் 5 கோடி மதிப்பில் செய்யப்பட்ட புதிய தங்க தேர் கோவிலுக்கு வெளியில் உள்ளது. அதற்கான இடத்தை ஒதுக்காததால் மழையிலும் வெய்யிலிலும் பாழடைந்து வருகிறது. மேலும் கோட்டை முழுவதும் குப்பையும் கூலமுமாக காட்சியளிக்கிறது. கோட்டையை சுத்தம் செய்வது கிடையாது.

     இந்த சம்பவம் குறித்து சென்னையில் உள்ள தொல்லியல் துறை உயரதிகாரியிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்டபோது பக்தர்களை சிறை வைத்த சம்பவம் தனக்கு தெரியாது. தாங்கள் சொன்ன பிறகு தான் எனக்கு தெரியவருகிறது என கூறினார்.

            சரித்திர புகழ் வாய்ந்த இந்த கோட்டையை பராமரிக்க துப்பில்லாத தொல்லியல் துறை மக்களால் பராமரித்து வரும் ஜலகண்டீஸ்வரர் கோவில் வழிபாட்டை தடுக்க வேண்டுமென முழு நோக்கத்துடன் செயல்படுவது கண்டிக்கதக்கது என பொதுமக்கள் கூறினர்.

பேட்டி: மகேஷ் (இந்து முன்னணி கோட்டத்தலைவர்).

 

Comments

Popular posts from this blog

• பெ.தெ.லீ. பாலிடெக்னிக் கல்லூரியில் “மெக்கத்லான் 2024.

• வேலூர் ஜெய்பீம் இரவு பள்ளி கூட்டமைப்பு "ஐம்பெரும் விழா”.