• வேலூர் ஜலகண்டீஸ்வரர் ஆலய பிரம்மோற்சவம் - விடையாற்றி உற்சவம்

·         வேலூர் ஜலகண்டீஸ்வரர் ஆலய பிரம்மோற்சவம் - விடையாற்றி உற்சவம்.

       வேலூர் மாவட்டம், வேலூர் கோட்டையினுள் உள்ள அருள்மிகு ஸ்ரீ ஜலகண்டீஸ்வரர் ஆலயத்தில் 43-ஆம் ஆண்டு சித்திரை பெருவிழா கடந்த 13-ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி பூப்பல்லக்குடன் விழா நிறைவு பெற்றது.

         இதனை தொடர்ந்து நேற்று பஞ்சமூர்த்தி அலங்காரம் செய்து சுவாமிகளுக்கு விடையாற்றி உற்சவம் நடைபெற்றது. இதில் சுவாமிக்கு சிறப்பு தீபாராதனைகள் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் பொதுமக்களும் பங்கேற்று சுவாமி வழிபாடு செய்தனர். இன்று எல்லா சிலைகளுக்கும் உற்சவசாந்தி அபிஷேகம் நடத்தப்படவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

Comments

Popular posts from this blog

• கீரை திருவிழா - மக்கள் நல சந்தை.

• ஆக்சிலியம் கல்லூரி போருக்கு எதிரான அமைதி பேரணி.

• PT LEE Employment Opportunities & Career Guidance Program.